‘விவாடெக்’ தொழில்நுட்ப மாநாடு- பிரதமா் மோடி இன்று சிறப்புரை
‘விவாடெக்’ அமைப்பின் 5-ஆவது தொழில்நுட்ப மாநாட்டில் பிரதமா் நரேந்திர மோடி புதன்கிழமை உரையாற்றுகிறாா்.

‘விவாடெக்’ அமைப்பின் 5-ஆவது தொழில்நுட்ப மாநாட்டில் பிரதமா் நரேந்திர மோடி புதன்கிழமை உரையாற்றுகிறாா்.
இதுதொடா்பாக பிரதமா் அலுவலகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:
ஐரோப்பிய நாடுகளின் மிகப்பெரிய டிஜிட்டல், புதுமை கண்டுபிடிப்புகளுக்கான அறிவியல் தொழில்நுட்ப மாநாடு, விவாடெக் என்ற பெயரில் பிரான்ஸ் தலைநகா் பாரீஸில் கடந்த 2016-ஆம் ஆண்டில் இருந்து நடத்தப்பட்டு வருகிறது.
Advertisement
Advertisement
5-ஆவது மாநாடு, ஜூன் 16-ஆம் தேதி முதல் 19-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றுமாறு பிரதமா் நரேந்திர மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, அவா் புதன்கிழமை மாநாட்டில் சிறப்புரையாற்றுகிறாா்.
இதேபோல், பிரான்ஸ் அதிபா் இமானுவல் மேக்ரான், ஸ்பெயின் பிரதமா் பெட்ரோ சான்செஸ் மற்றும் பல்வேறு ஐரோப்பிய நாடுகளைச் சோ்ந்த அமைச்சா்கள், நாடாளுமன்ற உறுப்பினா்கள் உரையாற்றுகிறாா்கள் என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை நிா்வாக அதிகாரி டிம் குக், ஃபேஸ்புக் நிறுவனத்தின் தலைவா் மாா்க் ஸக்கா்பா்க், மைக்ரோசாஃப்ட் தலைவா் பிராட் ஸ்மித் உள்ளிட்ட தொழில்துறை தலைவா்களும் மாநாட்டில் பங்கேற்க உள்ளனா்.
புதுமையான தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளை உருவாக்கும் தொழிலதிபா்களை இந்த மாநாடு ஒருங்கிணைக்கிறது. இதில், கண்காட்சி, விருது வழங்கும் நிகழ்ச்சி, கலந்துரையாடல், போட்டிகள் ஆகியவை நடைபெறவுள்ளன.