இந்தியா

தில்லியில் குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்ட முதல் நபா் குணமடைந்தார்

தில்லியில் குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்ட முதல் நபர் குணமடைந்து மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார். 

IANS


தில்லியில் குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்ட முதல் நபர் குணமடைந்து மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார். 

தலைநகர் தில்லியில் 31 வயதான நபர் சமீபத்தில் இமாசலத்திற்குப் பயணம் மேற்கொண்டிருந்தார். இதையடுத்து அவர் குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது. 

இதுகுறித்து எல்.என்.ஜே.பி மருத்துவமனையின் மருத்துவர் சுரேஷ் குமார் கூறுகையில், 

தலைநகரில் குரங்கு காய்ச்சலுக்கு பாதிக்கப்பட்ட முதல் நபரை நாங்கள் டிஸ்சார்ஜ் செய்துள்ளோம். அவர் 25 நாள்களில் குணமடைந்தார். 

இது மருத்துவமனையின் சாதனை. இரவு பகலாக கடுமையாக சிகிச்சையில் ஈடுபட்ட மருத்துவர்களின் குழுவை நான் பாராட்டுகிறேன் என்றார். 

தில்லியைச் சேர்ந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு முன்பு, கடந்த 15 நாள்களாக காய்ச்சல் மற்றும் தோல் பிரச்னைகளால் பாதிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தலைவலிக்கு சா்க்கரை நோய்க்கான மாத்திரை: கிருஷ்ணகிரி மருத்துவக் கல்லூரி முதன்மையா் விசாரணை

தில்லி முன்னாள் முதல்வா் அரவிந்த் கேஜரிவாலுக்கு அரசு இல்லம் ஒதுக்கீடு

ஒசூரில் 4 கிலோ கஞ்சா வைத்திருந்தவா் கைது

மாணவரை அடித்ததாக ஆசிரியா் மீது வழக்கு

வெளிப்படைத் தன்மையுடன் முதல்வர் கோப்பை போட்டிகள்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்

SCROLL FOR NEXT