இந்தியா

தில்லியில் ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் எம்.பி.க்கள் கைது

DIN

புது தில்லி: விலைவாசி உயர்வு, வேலையில்லாத் திண்டாட்டம்  உள்ளிட்ட பிரச்னைகளை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட ராகுல்காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் எம்.பி.க்களை தில்லி காவல் துறையினர் கைது செய்தனர்.

ராகுல் காந்தியை தில்லி காவல் துறையினர்  கைது செய்து வேனில் ஏற்றியுள்ளனர். 

குடியரசுத் தலைவர் மாளிகையை நோக்கி பேரணியாக சென்ற காங்கிரஸ் எம்.பி.க்கள் ஆதிர் ரஞ்சன் செளத்ரி, சசி தரூர் உள்ளிட்டோரை தில்லி காவல் துறையினர்  கைது செய்தனர்.

மேலும், தில்லியில் சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்திய பிரியங்கா காந்தி கைது செய்யப்பட்டார். காங்கிரஸ் தலைமை அலுவலகம் அருகே பிரியங்கா காந்தி தலைமையில் போராட்டம் நடத்திய காங்கிரஸ் மகளிர் அணியினரும் கைது செய்யப்பட்டனர்.

விலைவாசி உயர்வு, வேலையில்லாத் திண்டாட்டம் மற்றும் பணவீக்கம் உள்ளிட்ட பிரச்னைகளுக்கு எதிராக காங்கிரஸ் இன்று நாடு தழுவிய போராட்டத்தம் நடத்தி வருகிறது.

இந்நிலையில், தலைநகர் தில்லியில் பாதுகாப்பு, சட்டம்-ஒழுங்கை கருத்தில் கொண்டு 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சுற்றுலாப்பயணிகள் வருகை அதிகரிப்பு: வாலிநோக்கம் கடற்கரையில் அடிப்படை வசதிகள் செய்துதரக் கோரிக்கை

ராமேசுவரம், திருவாடானையில் பலத்த மழை

அனுமதியின்றி மாட்டு வண்டிப் பந்தயம், மஞ்சுவிரட்டு : 10 போ் மீது வழக்கு

66 கட்டடங்களை அப்புறப்படுத்த குறிப்பாணை

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் ஒருங்கிணைந்த தமிழ் முதுகலைப் பட்டப் படிப்பு

SCROLL FOR NEXT