ஞானேந்திர பிரசாத் 
இந்தியா

தெலங்கானா மாநில பாஜக தலைவர் மரணம்! தற்கொலையா?

தெலங்கானா மாநில பாஜக தலைவர் ஞானேந்திர பிரசாத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

DIN

தெலங்கானா மாநில பாஜக தலைவர் ஞானேந்திர பிரசாத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்த பாஜக மூத்த தலைவர் ஞானேந்திர பிரசாத், ஹைதராபாத்தில் உள்ள அவரது வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார். 

தகவலறிந்த போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது ஞானேந்திர பிரசாத் மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்தார்.

பின்னர் போலீசார் அவரது உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 

மியாப்பூர் காவல் நிலைய போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர். 

'அவரது தற்கொலைக்கான காரணம் இன்னும் தெரியவில்லை, ஆனால் அவர் கடந்த சில நாட்களாக அவர் மாடியில் உள்ள தனி அறையில் தங்கியுள்ளார். விசாரணைக்குப் பிறகே தற்கொலைக்கான காரணம் தெரிய வரும்' என்று போலீசார் தெரிவித்தனர். 

பாஜக தலைவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அன்னிய நிதி வெளியேற்றத்தால் சென்செக்ஸ் 519 புள்ளிகள் சரிவுடன் நிறைவு!

சரும அழகைக் கெடுக்கும் பானங்கள்! பளபளப்பான சருமத்திற்கு இதைச் செய்யுங்கள்!

தவறுதலாக 43 ஆண்டுகள் சிறை! இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவரை நாடு கடத்தத் தடை

அடியே, அலையே! பராசக்தி முதல் பாடல் புரோமோ!

ஹிந்துஜா குழுமத் தலைவர் கோபிசந்த் காலமானார்

SCROLL FOR NEXT