முகப்பு
இந்தியா

கணவரை வீட்டுக்குள் புதைத்துவிட்டு நாடகமாடியவரை காட்டிக் கொடுத்தது எது?

உத்தரப்பிரதேச மாநிலம் பரேலி பகுதியில், காணாமல் போனதாகக் கருதப்பட்டு வந்த கணவரின் உடல், அவரது வீட்டின் படுக்கையறையில் புதைக்கப்பட்டிருந்ததை காவல்துறையினர் கண்டறிந்துள்ளனர்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:02 AM
கணவரை வீட்டுக்குள் புதைத்துவிட்டு நாடகமாடியவரை காட்டிக் கொடுத்தது எது?
பகிர்:

உத்தரப்பிரதேச மாநிலம் பரேலி பகுதியில், காணாமல் போனதாகக் கருதப்பட்டு வந்த கணவரின் உடல், அவரது வீட்டின் படுக்கையறையில் புதைக்கப்பட்டிருந்ததை காவல்துறையினர் கண்டறிந்துள்ளனர்.

உத்தரப்பிரதேச மாநிலம் ஷாஜஹான்பூரில் பரேலி என்ற இடத்தில் தனது கணவரின் உடலை படுக்கையறையில் புதைத்துவிட்டு காணாமல் போனதாக 27 வயது பெண் கூறிவந்த நிலையில், சில நாள்களாக வீட்டுக்குள் இருந்து துர்நாற்றம் வந்ததால் கணவரின் சகோதரர் காவல்நிலையத்துக்கு புகார் அளித்துள்ளார்.

இதையடுத்து விரைந்து வந்த காவல்துறையினர், தோண்டிப் பார்த்ததில், படுக்கையறையில், காணாமல் போனதாகக் கூறப்பட்டவர் புதைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. இதையடுத்து அவரது உடலை உடல் கூறாய்வுக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

இது குறித்து காவல்துறையினர் கூறுகையில், மூன்று சகோதரர்களில் இளையவர் கோவிந்த் சிங். இவர் தனது மனைவி மற்றும் மூன்று பிள்ளைகளுடன் தனியாக ஒரு வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்த நிலையில் அவர் ஆகஸ்ட் 8ஆம் தேதி காணாமல் போய்விட்டதாக மனைவி கூறியிருக்கிறார். 

மனைவியிடம் விசாரணை நடத்தியதில், ஆகஸ்ட் 7ஆம் தேதி தனக்கும் கணவருக்கும் சண்டை வந்ததாகவும்,  அன்றிரவு அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகவும், உறவினர்களுக்குப் பயந்து அவரை வீட்டுக்குள்ளேயே புதைத்துவிட்டதாகவும் கூறியுள்ளார்.

இந்த நிலையில்தான் வீட்டுக்குள் இருந்து துர்நாற்றம் வீசியதால், கணவரின் உடல் வீட்டுக்குள்ளேயே புதைக்கப்பட்டது வெளிச்சத்துக்கு வந்தது. உடல் கூறாய்வு முடிவுக்காக காவல்துறையினர் காத்திருக்கிறார்கள். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.