முகப்பு
கோப்புப்படம்
இந்தியா

விவசாயிகளுக்கு 1.5% வட்டி மானியம்: மத்திய அரசு முடிவு

விவசாயிகளுக்கு 1.5% வட்டி மானியம் அளிக்க மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்தியா

விவசாயிகளுக்கு 1.5% வட்டி மானியம்: மத்திய அரசு முடிவு

விவசாயிகளுக்கு 1.5% வட்டி மானியம் அளிக்க மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:05 AM
கோப்புப்படம்
பகிர்:

புது தில்லி: விவசாயிகளுக்கு 1.5% வட்டி மானியம் அளிக்க மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

ரூ.3 லட்சம் வரையிலான குறுகிய கால விவசாயக் கடனுகளுக்கு ஆண்டுக்கு 1.5% வட்டி மானியம் அளிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. விவசாயத் துறையில் அதிகளவு கடன்  தரும் நோக்கில் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார்.

சுற்றுலா, சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் துறைக்கான அவசரக் கடன் வரி உத்தரவாதத் திட்டத்தின் வரம்பை ரூ.50,000 கோடியாக உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

ரிசர்வ் வங்கி வட்டி விகிதங்களை அதிகரித்துள்ளதால் இவ்வாண்டு வட்டிக்கு மானியம் அளிக்க மத்திய அரசு முடிவு எடுத்துள்ளது. மீனவர்கள், கால்நடை விவசாயிகளுக்கும் இந்த மானியம் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விவசாயிகளுக்கான வட்டி மானியத்துக்கு ரூ.34,856 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அனைத்து வகையான மானியங்களும் விவசாயிகளுக்கு தொடர்ந்து வழங்கப்படும் என மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார்.
 

முழு கட்டுரையைப் படிக்க →