பின்வாங்கியது ரயில்வே: திரும்பப் பெறப்பட்ட பயனர் தரவுகள் விற்பனை 
இந்தியா

பின்வாங்கியது ரயில்வே: திரும்பப் பெறப்பட்ட பயணிகளின் தரவுகள் விற்பனை

வணிக நோக்கங்களுக்காக ரயில் பயணிகளின் தகவல்களைத் தனியாருக்கு விற்பனை செய்யும் டெண்டரை திரும்பப் பெறுவதாக இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது.

DIN

வணிக நோக்கங்களுக்காக ரயில் பயணிகளின் தகவல்களைத் தனியாருக்கு விற்பனை செய்யும் டெண்டரைத் திரும்பப் பெறுவதாக இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது.

இந்திய ரயில்வே நிறுவனத்திற்கு சொந்தமான ஐஆர்சிடிசி இணையதளத்தில் பயணிகள் ரயில் முன்பதிவை மேற்கொண்டு வருகின்றனர். இதில் பயணிகளின் பெயர், வயது, முகவரி, அலைபேசி எண்கள் உள்ளிட்ட பல தகவல்களைப் பெற்று இந்திய ரயில்வே பெற்று முன்பதிவை மேற்கொள்கிறது.

இந்நிலையில் பயணிகளின் தரவுகளை விற்பனை செய்வதற்கு தனியார் நிறுவனங்களிடம் இந்திய ரயில்வே டெண்டர் கோரியிருந்தது. வருவாயை அதிகரிக்கும் முயற்சியாக இந்த டெண்டர் கோரப்பட்டதாக தெரிவித்த ரயில்வேயின்  முடிவு பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. 

இந்தத் திட்டத்தின் மூலம் ரூ. 1000 கோடி வரை வருவாய் ஈட்டப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக இந்திய ரயில்வே தெரிவித்திருந்தது.

இந்த நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் சசிதரூர் தலைமையிலான தகவல் தொழில்நுட்பத்திற்கான நாடாளுமன்ற நிலைக் குழுவிடம் பதிலளித்துள்ள ஐஆர்சிடிசி, வணிக நோக்கங்களுக்காக பயணிகளின் தரவுகள் விற்பனை  செய்யப்படுவதற்கான டெண்டர் கோரப்படுவது திரும்பப் பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய அரசின் பயனர் தனிப் பாதுகாப்பு 2018 சட்டத்தின்படி பணமாக்கல் நடவடிக்கைக்காக விடுக்கப்பட்ட டெண்டர் திரும்பப் பெறப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அடுத்த படம் தனுஷுடன்தான்: மாரி செல்வராஜ்

பங்குச்சந்தை முதலீடு: அதிக லாபம் என்று சொன்னாலே நம்ப வேண்டாம்!!

மெஸ்ஸி மேஜிக், ஜோர்டி ஆல்பா ஓய்வு: இன்டர் மியாமி அபார வெற்றி!

உலகத்தரத்தில் கொளத்தூர் வண்ண மீன் வர்த்தக மையம்: முதல்வர் ஸ்டாலின்

பாலைவனம், சூரிய அஸ்தமனம், அமைதி... இனாயா சுல்தானா!

SCROLL FOR NEXT