‘வீட்டில் தொழுகை நடத்தினால் கைதா?’ - அசாதுதீன் ஓவைசி கேள்வி
வீட்டில் தொழுகை நடத்தியதற்காக வழக்கு பதிந்த செயலை கண்டித்து அகில இந்திய மஜ்லீஸ் கட்சியின் தலைவரும், எம்.பி,யுமான அசாதுதீன் ஓவைசி கண்டனம் தெரிவித்துள்ளார்.
வீட்டில் தொழுகை நடத்தியதற்காக வழக்கு பதிந்த செயலை கண்டித்து அகில இந்திய மஜ்லீஸ் கட்சியின் தலைவரும், எம்.பி,யுமான அசாதுதீன் ஓவைசி கண்டனம் தெரிவித்துள்ளார்.
உத்திரப்பிரதேசம், மொராதாபத் மாவட்டம் சாஜ்லெட் பகுதியில் பள்ளிவாசல்கள் அருகில் இல்லாததால், வீட்டில் அதிக நபர்கள் திரண்டு தொழுகை நடத்தியதாக விடுகளின் உரிமையாளர் உட்பட 16 பேர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதில் அந்த இரண்டு உரிமையாளர்களும் தலைமறைவாகியுள்ளனர் என காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுக்குறித்து அகில இந்திய மஜ்லீஸ் கட்சியின் தலைவரும், எம்.பி,யுமான அசாதுதீன் ஓவைசி கூறியதாவது:
Advertisement
Advertisement
தொழுகை எங்கு வேண்டுமானாலும் செய்யலாமென உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. பின்பு ஏன் வீட்டில் தொழுகை நடத்தியது கேள்விக்குள்ளாக்கப்படுகிறது? இது அநியாயம்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.