முகப்பு
இந்தியா

இந்த 6 மாநிலங்களில் அடுத்த 3 நாள்களுக்கு பனிப்பொழிவு: வானிலை மையம் தகவல்

தில்லி, ஹிமாசல், உத்தர பிரதேசம், பஞ்சாப், ஹரியாணா, சண்டீகர் ஆகிய 6 மாநிலங்களில் அடுத்த 3 நாள்களுக்கு கடும் பனிமூட்டம் இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 11:09 AM
பகிர்:

தில்லி, ஹிமாசல், உத்தர பிரதேசம், பஞ்சாப், ஹரியாணா, சண்டீகர் ஆகிய 6 மாநிலங்களில் அடுத்த 3 நாள்களுக்கு கடும் பனிமூட்டம் இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

தில்லியில் கடந்த சில நாள்களாக கடும் பனி பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. கடும் பனி மூட்டத்தினால் அங்கு வெப்பநிலை 6.3 டிகிரி செல்சியஸாக பதிவாகியுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தில்லி, ஹிமாசல், உத்தர பிரதேசம், பஞ்சாப், ஹரியாணா, சண்டீகர் ஆகிய 6 மாநிலங்களில் அடுத்த 3 நாள்களுக்கு கடும் பனிப்பொழிவு இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தில்லியில் ஏற்கெனவே கடும் பனிமூட்டத்தினால் சாலைப் போக்குவரத்து மிகவும் குறைந்து காணப்படுகிறது. 

மேலும், ராஜஸ்தான், பிகார், மேற்கு வங்காளம், சிக்கிம் ஆகிய மாநிலங்களில் அடுத்த 2 நாள்களுக்கு அடர்ந்த பனிமூட்டம் காணப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

முழு கட்டுரையைப் படிக்க →