எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர்களுக்கே இந்த நிலையா? 
இந்தியா

எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர்களுக்கே இந்த நிலையா?

எய்ம்ஸ் மருத்துவமனையின் மருத்துவர்கள் குடியிருப்புகளில் உள்ள குழாய்களில் வரும் தண்ணீரில் புழு, பூச்சிகள் இருப்பதாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

DIN

புது தில்லி: நாட்டிலேயே மிகப் பெரிய மற்றும் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் மருத்துவர்கள் குடியிருப்புகளில் உள்ள குழாய்களில் வரும் தண்ணீரில் புழு, பூச்சிகள் இருப்பதாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

மருத்துவர்கள் தங்கியிருக்கும் குடியிருப்புகளில் உள்ள குழாய்களில் வரும் தண்ணீரில், புழுக்கள், கொசுவின் லார்வா, பூச்சிகள் இருப்பதாகவும், இது தொடர்பாக பல முறை முறையிட்டும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக தற்போது மருத்துவமனை இயக்குநருக்கும் அவர்கள் கடிதம் எழுதியிருக்கிறார்கள். அதில், மருத்துவ அவசரநிலையாக இதனைக் கருதும்படியும், இந்த குழாய் தண்ணீரைத்தான் தாங்கள் காய்கறிகள், பழங்களை கழுவவும், குளிக்கவும் பயன்படுத்துவதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

தண்ணீரில் உயிரோடு புழுக்களும் பூச்சிகளும் இருப்பதாகவும், இந்த நிலை கடந்த ஒரு வார காலத்துக்கும் மேல் நீடிப்பதாகவும் அந்தக் கடிதத்தில் தெரிவித்துள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தெய்வ தரிசனம்... எம பயம், செய்த பாவம் நீங்கும் திருசக்கரப்பள்ளி சக்ரவாகேஸ்வரர்!

ஒரே மாதத்தில் ரூ.6.25 கோடி அபராதம் வசூல்: தெற்கு ரயில்வே சாதனை!

விடியோ அழைப்பு மூலமாக டிஜிட்டல் அரெஸ்ட்! புது ஸ்டைலில் ஆன்லைன் பண மோசடி!

சொந்த மண்ணில் 3,211 நாள்களுக்குப் பிறகு சதம்: கே.எல்.ராகுல் புதிய சாதனை!

மியான்மரில் 2வது நாளாக இன்றும் நிலநடுக்கம்!

SCROLL FOR NEXT