இந்தியா

குஜராத்தில் பேருந்து மீது கார் மோதியதில் 9 பேர் பலி; இழப்பீடு அறிவிப்பு

DIN

குஜராத்தில் பேருந்து மீது கார் மோதி ஏற்பட்ட விபத்தில் 9 பேர் பலியாகினர். 

குஜராத்தில் ஆமதாபாத் - மும்பை நெடுஞ்சாலையில் நவ்சரி எனும் பகுதியில் இன்று அதிகாலை 4 மணியளவில் பேருந்து மீது எஸ்யுவி கார் ஒன்று மோதியது. 

இந்த விபத்தில் 9 பேர் பலியாகியுள்ளனர். மேலும் பலர் காயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

காவல்துறையினர் இதுகுறித்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர். 

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், குஜராத் விபத்து செய்தி அதிர்ச்சியாக இருப்பதாகவும் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுவதாகவும் கூறிய அவர், உள்ளூர் நிர்வாகம் தேவையான அனைத்து உதவிகளைச் செய்யவும் வலியுறுத்தியுள்ளார்.

தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடியும் இந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்ததுடன் பிரதமரின் தேசிய நிவாரண நிதியில் இருந்து உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 2 லட்சமும் காயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 50,000 இழப்பீடு வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாடு முழுவதும் நாளை கடைகள் இயங்காது

சிதம்பரம்: வடலூர் பெருவெளி ஆர்ப்பாட்டத்திற்கு சென்றவர்கள் கைது!

கோடைக்காலம் வந்துவிட்டது...!

உதகைக்கு 5 நிமிடத்திற்கு ஒரு பேருந்து: போக்குவரத்து கழகம் அறிவிப்பு!

பூமியை நெருங்கும் எரிகற்கள்: எச்சரிக்கும் நாசா! என்ன நடக்கும்?

SCROLL FOR NEXT