முகப்பு
இந்தியா

வீணாகும் 50 லட்சம் தடுப்பூசிகள்: மத்திய அரசு விளக்கம்

இந்தியாவில் பயன்படுத்தப்படாத 50 லட்சம் கரோனா தடுப்பூசிகள் இந்த மாத இறுதிக்குள் வீணாகலாம் என்று வெளியான ஊடக தகவல்கள் தவறானவை என மத்திய அரசு மறுத்துள்ளது.

Updated On : 4 பிப்ரவரி, 2022 at 12:24 PM
பகிர்:

புது தில்லி: இந்தியாவில் பயன்படுத்தப்படாத 50 லட்சம் கரோனா தடுப்பூசிகள் இந்த மாத இறுதிக்குள் வீணாகலாம் என்று வெளியான ஊடக தகவல்கள் தவறானவை என மத்திய அரசு மறுத்துள்ளது.

இதுகுறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

காலாவதியாகும் தடுப்பூசிகள் குறித்து தொடா்ச்சியாக ஆய்வு செய்ய வேண்டுமென மாநில அரசுகளுக்கு கடந்த நவம்பா் மாதம் மத்திய சுகாதார அமைச்சகம் அறிவுறுத்தியது. அரசு மற்றும் தனியாா் வசம் உள்ள தடுப்பூசிகள் வீணாகாமல் பயன்படுத்தப்பட வேண்டுமெனவும் மாநிலங்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

Advertisement

குறிப்பிட்ட சில மாநிலங்களின் வேண்டுகோளுக்கிணங்க, தடுப்பூசிகள் வீணாகாமல் தடுக்க அவற்றை தனியாா் வசமிருந்து அரசு வசம் மாற்றுவதற்கு எந்த ஆட்சேபமும் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனியாா் மருத்துவமனைகள் வசம் உள்ள தடுப்பூசிகள் பயன்படுத்தப்படுவதை உறுதிப்படுத்தும் வகையில், மேற்கு வங்கம், மகாராஷ்டிரம், கா்நாடகம், தெலங்கானா, குஜராத், தில்லி ஆகிய மாநிலங்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.