உண்மையிலேயே நாட்டில் கரோனா பரவல் குறைந்துவருகிறதா?
கேரளம், மிசோரம் போன்ற ஒரு சில மாநிலங்களில் மட்டும் கரோனா உறுதியாகும் விகிதம் கவலையளிக்கும் வகையில் இருப்பதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
புது தில்லி: நாடு முழுவதும் கரோனா பரவல் நம்பிக்கையளிக்கும் வகையில் இருப்பதாகவும், கேரளம், மிசோரம் போன்ற ஒரு சில மாநிலங்களில் மட்டும் கரோனா உறுதியாகும் விகிதம் கவலையளிக்கும் வகையில் இருப்பதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் கரோனா பாதிப்பு குறைந்து வந்தாலும், அனைத்து மாநிலங்களின் புள்ளிவிவரங்களையும் ஆய்வு செய்யும்போது, சமார் 40 மாவட்டங்களில் மட்டும் தொடர்ந்து வாராந்திர கரோனா பாதிப்பு அதிகரித்து வருவது தெரிய வந்துள்ளது. அந்த மாவட்டங்களி, தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க.. அவிநாசியில் விஏஓ லஞ்சம் பெறுவது தொடர்பான பட்டியலால் பரபரப்பு
தற்போது நாட்டில் 141 மாவட்டங்களில் கரோனா உறுதியாகும் விகிதம் 10 சதவீதத்துக்கு மேல் உள்ளது, 160 மாவட்டங்களில் 5 - 10 சதவீதத்துக்குள் இருக்கிறது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
நாட்டிலேயே கேரளம், மகாராஷ்டிரம், தமிழகம், கர்நாடகத்தில் 50 ஆயிரத்தக்கும் மேற்பட்ட கரோனா நோயாளிகள் உள்ளனர். கேரளத்தில் கரோனா உறுதியாகும் விகிதம் 29.57 சதவீதமாக உள்ளது. இதுபோல, மிசோரம், இமாசலம், அருணாசலத்திலும் கரோனா உறுதியாகும் விகிதம் கவலைதரும் அளவிலேயே இருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.