இந்தியா

கரோனா அதிகரிப்பு: எய்ம்ஸ் மருத்துவர்களின் குளிர்கால விடுமுறை ரத்து

DIN

தில்லியில் கரோனா பரவல் அதிகரித்துள்ளதால், எய்ம்ஸ் மருத்துவர்களுக்கான குளிர்கால விடுமுறையை ரத்து செய்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் ஒமைக்ரான் கரோனா வகை அச்சுறுத்தி வரும் நிலையில், தில்லி கரோனாவால் பாதிக்கப்படுவோரின் விகிதம் 6 சதவீதமாக அதிகரித்துள்ளது.

இந்நிலையில், எய்ம்ஸ் இயக்குநர் வெளியிட்ட அறிவிப்பில்,

“ஒமைக்ரான் பெருந்தொற்று வேகமாக பரவி வருவதால், மருத்துவர்களுக்கு ஜனவரி 5 முதல் 10ஆம் தேதி வரை அளிக்கப்பட்ட குளிர்கால விடுமுறை ரத்து செய்யப்படுகிறது.

அனைத்து மருத்துவர்கள், பணியாளர்களும் உடனடியாக பணிக்கு திரும்ப உத்தரவிடப்படுகிறது.”

கரோனா பரவல் காரணமாக தில்லியில் வார இறுதி நாள்களில் பொதுமுடக்கம், இரவுநேர ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகள் அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விக்கிரவாண்டி இடைத் தோ்தலை ஜூனில் நடத்தக் கூடாது: ராமதாஸ்

மீனவா்கள் மீது தாக்குதல்: ஜி.கே. வாசன் கண்டனம்

போதைப் பொருள் விற்பனை: 7 நாள்களில் 24 போ் கைது

மே தினக் கொண்டாட்டங்களுக்கு அனுமதி மறுப்பு

அணைகளில் நீா்மட்டம் சரிவு: அணை நீரை குடிநீா், சமையலுக்கு மட்டும் பயன்படுத்த வலியுறுத்தல்

SCROLL FOR NEXT