மேற்கு பாகிஸ்தானில் கனமழை: 300 வீடுகள் இடிந்து சேதம்
மேற்கு பாகிஸ்தானில் கனமழை மற்றும் பனிப்பொழி காரணமாக சுமார் 300 -க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து சேதமாகியுள்ளன.
மேற்கு பாகிஸ்தானில் கனமழை மற்றும் பனிப்பொழி காரணமாக சுமார் 300 -க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து சேதமாகியுள்ளன.
திங்கள்கிழமை இரவு பலுசிஸ்தான் மாகாணத்தை சூறாவளி புயல் தாக்கியது. இதனால், தாழ்வுப் பகுதியான மக்ரான் மிகவும் பாதிக்கப்பட்டது. திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமை 20 மணி நேரத்தில் 10 செ.மீ மழைப் பதிவானது. குவாதர் பகுதியில் 10 செ.மீ மழை பெய்துள்ளது.
கனமழை காரணமாக ஆயிரக்கணக்கானோர் தங்கள் வீடுகளை இழந்துள்ளனர். அவசர மீட்பு நடவடிக்கைகளுக்கு ராணுவத்தை அனுப்பக்கோரி அதிகாரிகள் கட்டாயப்படுத்தியுள்ளனர்.
கராச்சியுடன் இணைக்கும் மக்ரான் கடற்கரை நெடுஞ்சாலை நீரில் அடித்துச் செல்லப்பட்டது. பல வீடுகளில் மழை நீர் சூழ்ந்துள்ளதால், மின் விநியோகம் துண்டிக்கப்பட்டது.
குவாதர் விமான நிலையத்தின் ஓடுபாதை அருகே உள்ள மலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதுவரை உயிர்ச்சேதம் எதுவும் பதிவாகவில்லை.
மேலும், இந்த வார இறுதி வரை மழை பெய்யும் என பாகிஸ்தான் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.