மாநில முதல்வர்களுடன் விரைவில் பிரதமர் ஆலோசனை 
இந்தியா

மீண்டும் பொதுமுடக்கம்? மாநில முதல்வர்களுடன் விரைவில் பிரதமர் ஆலோசனை

நாட்டில் கரோனா பரவல் அதிகரித்துவரும் நிலையில், மாநில முதல்வர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி விரைவில் காணொலி மூலம் சந்தித்து ஆலோசனை நடத்தவிருக்கிறார்.

DIN


நாட்டில் கரோனா பரவல் அதிகரித்துவரும் நிலையில், மாநில முதல்வர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி விரைவில் காணொலி மூலம் சந்தித்து ஆலோசனை நடத்தவிருக்கிறார்.

இந்த வாரத்தில் குறிப்பாக வியாழக்கிழமையன்று, அனைத்து மாநில முதல்வர்களுடனும்,  கரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி காணொலி மூலமாக ஆலோசனை நடத்தலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாட்டில் நாள்தோறும் புதிதாக கரோனா பாதிப்பு உறுதி செய்யப்படுவோர் எண்ணிக்கை ஒன்றரை லட்சத்துக்கும் அதிகமாக பதிவாகி வருகிறது. 

தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் இரவு நேர ஊரடங்கு, வார இறுதி நாள்களில் ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், நாட்டில் கரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி நடத்தவிருக்கும் ஆலோசனை மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மருத்துவமனையில் பழைய கட்டடத்தை இடித்தபோது எரிவாயுக் கசிவு: தொழிலாளா்கள் வெளியேற்றம்

ராமநாதபுரத்தில் 45 விநாயகா் சிலைகள் கரைப்பு

சிதம்பரேஸ்வரா் கோயிலில் ஆவணி மூல திருவிழா கொடியேற்றம்

மாணவா்களின் கோரிக்கையை ஏற்று புதிய பேருந்து சேவை தொடக்கம்

விருதுநகா் மாவட்டத்தில் விநாயகா் சிலை ஊா்வலம்

SCROLL FOR NEXT