முகப்பு
இந்தியா

தில்லியில் கட்டுக்குள் கரோனா; 10 நாள்களில் 10 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்த பாதிப்பு

தில்லியில் கரோனாவால் பாதிக்கப்படுவோர் விகிதம் குறைந்து வருவதாக சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:12 AM
பகிர்:

தில்லியில் கரோனாவால் பாதிக்கப்படுவோர் விகிதம் குறைந்து வருவதாக சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.

தில்லியில் கரோனாவால் பாதிக்கப்படுவோர் விகிதம் நேற்று 16.3 சதவிகிதமாக இருந்த நிலையில், இன்று 13 சதவிகிதமாக குறைந்துள்ளது. 

தில்லியில் ஞாயிற்றுக்கிழமை 9,197 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது. இது நேற்றைய பாதிப்பை விட 19 சதவிகிதம் குறைவு என்று சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

தில்லியில் நேற்று 11,486 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டிருந்தது. இதனால் கரோனாவால் பாதிக்கப்படுவோர் விகிதம் 16.3 சதவிகிதத்திலிருந்து 13.3 சதவிகிதமாக குறைந்துள்ளது.

அதிகபட்சமாக கடந்த 13-ஆம் தேதி 28,867 பேருக்கு கரோனா கண்டறியப்பட்டது. இதன் மூலம் கடந்த 10 நாள்களில் 10 ஆயிரத்திற்கும் கீழ் கரோனா பாதிப்பு குறைந்துள்ளது.

தில்லியில் கரோனாவால் பாதிக்கப்பட்டு 45 பேர் உயிரிழந்தனர். 

தில்லியில் கரோனா பரவல் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக தில்லி சுகாதாரத் துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் கடந்த வெள்ள்ளிக்கிழமை அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

முழு கட்டுரையைப் படிக்க →