இந்தியா

கர்நாடகத்தில் 50 ஆயிரத்தைத் தாண்டிய தினசரி கரோனா

DIN

கர்நாடகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 50 ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. எனினும் இறப்பு விகிதம் குறைவாகவே உள்ளதாக மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

கரோனா பாதிப்பு நிலவரம் குறித்த பட்டியலை அம்மாநில சுகாதாரத் துறை அமைச்சர் கே. சுதாகர் தனது சுட்டிரைப் பதிவில் வெளியிட்டுள்ளார். 

அதில், கடந்த 24 மணிநேரத்தில் கரோனா 50,210 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் பெங்களூருவில் 26,299 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு நாளில் 19 பேர் கரோனா தொற்றால் உயிரிழந்தனர். பெங்களூருவில் மட்டும் 8 பேர். 

கரோனாவிலிருந்து இன்று (ஜன.23) ஒரு நாளில் 22,842 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 

கரோனாவால் பாதிக்கப்பட்டு மாநிலம் முழுவதும் 3,57,796 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். பெங்களூருவில் மட்டும் 2.31 லட்சம் பேர் சிகிச்சையில் உள்ளனர். 

கர்நாடகத்தில் கரோனாவால் பாதிக்கப்படுவோர் விகிதம் 22.77 சதவிகிதமாக அதிகரித்துள்ளது என்று சுட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தங்கம் விலை: பவுனுக்கு ரூ.200 குறைவு

அடுத்த 2 மணி நேரத்துக்கு 9 மாவட்டங்களில் மழை!

சக்தி வாய்ந்த நாடாக இந்தியா வளர்ந்து வருவதை பாகிஸ்தான் தலைவர்கள் ஒப்புக் கொள்கிறார்கள்: ராஜ்நாத் சிங்

குலசேகரன்பட்டினத்தில் விண்வெளி பூங்கா: டிட்கோ அதிகாரபூர்வ அறிவிப்பு

மகாராஷ்டிரத்தில் இன்று பாஜக பொதுக்கூட்டம்: பிரதமர் மோடி பங்கேற்பு

SCROLL FOR NEXT