முகப்பு
இந்தியா

பலி குறைவு, பாதிப்பு அதிகம்: கேரளத்தின் கரோனா நிலவரம்

கேரளத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 51,570 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. ஒரு நாளில் மட்டும் 14 பேர் உயிரிழந்தனர். 

Updated On : 30 ஜனவரி, 2022 at 8:51 PM
பகிர்:


கேரளத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 51,570 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. ஒரு நாளில் மட்டும் 14 பேர் உயிரிழந்தனர்.  

நேற்று 50,812 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், இன்று சற்று அதிகரித்துள்ளது.  

கேரளத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் அடங்கிய விவரங்கள் குறித்த தகவலை அம்மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. 

Advertisement

அதில், கடந்த 24 மணிநேரத்தில் 1,03,366 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட கரோனா பரிசோதனையில், 51,570 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால், கேரளத்தில் மொத்தமாக கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 59,83,515-ஆக அதிகரித்துள்ளது.

அதிகபட்சமாக எர்ணாகுளத்தில் 9,704 பேரும், திரிச்சூரில் 7,289 பேரும், திருவனந்தபுரத்தில் 5,746 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். 

கடந்த 24 மணிநேரத்தில் 14 பேர் உயிரிழந்தனர். இதனால் இதுவரை மொத்தமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 53,666-ஆக உயர்ந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.