இந்தியா

பதவியேற்றுக் கொண்ட 27 மாநிலங்களவை உறுப்பினர்களில் 18 பேர் பாஜகவினர்

PTI


புது தில்லி: மாநிலங்களவைக்கு இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் தேர்தலில் வெற்றி பெற்ற 57 உறுப்பினர்களில் 27 பேர் இன்று பதவியேற்றுக் கொண்டனர். 57 பேரில் 14 பேர் மாநிலங்களவைக்கு மீண்டும் தேர்வாகியுள்ளனர். 

மாநிலங்களவையில் இன்று புதிதாக தேர்வான 27 பேரும், அவைத் தலைவர் வெங்கைய நாயுடு முன்னிலையில் மாநிலங்களவை உறுப்பினர்களாக பதவியேற்றுக் கொண்டனர்.

இன்று பதவியேற்றுக் கொண்ட 27 எம்.பி.க்களில்  18 பேர் பாஜகவைச் சேர்ந்தவர்கள். 10 மாநிலங்களைச் சேர்ந்த 27 பேரும் பல்வேறு மொழிகளில் பதவியேற்றுக் கொண்டனர். 12 பேர் ஹிந்தியிலும், 4 பேர் ஆங்கிலத்திலும், சமஸ்கிருதம், கன்னடம், மராத்தி, ஒரியா மொழிகளில் தலா இருவரும், தமிழ், தெலுங்கு, பஞ்சாபி மொழிகளில் தலா ஒருவரும் பதவியேற்றுக் கொண்டனர்.

புதிதாக தேர்வு செய்யப்பட்ட 57 பேரில், முன்னதாக நான்கு பேர் ஏற்கனவே பதவியேற்றுக் கொண்டனர். இன்று பதவியேற்றுக் கொள்ளாத மற்றவர்கள், நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத் தொடர் தொடங்கும் முதல் நாளில் பதவியேற்பார்கள் என்று கூறப்படுகிறது.

நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையிலிருந்து வரும் ஜூலை மாத இறுதியில் 72 உறுப்பினர்கள் ஓய்வு பெறவிருப்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வணிக சிலிண்டர் விலை குறைப்பு: எவ்வளவு?

தலைமைச் செயலக பணி பெயரில் போலி நியமனம்: தரகா்களிடம் பணம் கொடுத்து ஏமாறும் பட்டதாரிகள்

இன்று யாருக்கு அதிர்ஷ்டம்!

இன்றைய ராசி பலன்கள்!

தில்லி பிரதேச காங்கிரஸின் இடைக்காலத் தலைவராக தேவேந்தா் யாதவ் நியமனம்

SCROLL FOR NEXT