முகப்பு
இந்தியா

நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் போராட்டம்

அமலாக்கத்துறையை தவறாக பயன்படுத்துவதாகக் கூறி நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:51 AM
பகிர்:

அமலாக்கத்துறையை தவறாக பயன்படுத்துவதாகக் கூறி நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

நேஷனல் ஹெரால்டு பணமோசடி வழக்கில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை இன்று ஆஜராகக் கோரி அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் காங்கிரஸ் தொண்டர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வரும் நிலையில், அமலாக்கத்துறையை தவறாக பயன்படுத்துவதாக குற்றச்சாட்டு எழுப்பி நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் எம்.பி.க்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

முன்னதாக, நாடாளுமன்றத்தில் இரு அவைகளிலும் அமலாக்கத்துறையின் நடவடிக்கைக்கு எதிராக முழக்கமிட்டு அமளியில் ஈடுபட்டதால் சிறிது நேரம் அவைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →