சோனியா காந்தி மீதான அமலாக்கத்துறை விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவித்து தில்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் காங்கிரசார் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நேஷனல் ஹெரால்டு பத்திரிகையில் சட்டவிரோத பணப் பரிவா்த்தனை தொடர்பான வழக்கில், காங்கிரஸ் தலைவா் சோனியா காந்தி அமலாக்கத் துறை முன்பாக இன்று இரண்டாவது நாளாக ஆஜராகியுள்ளார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் போராட்டம் நடைபெற்று வருகிறது.
அந்த வகையில், தில்லி அக்பர் சாலையில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் காங்கிரசார் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதுபோல, தில்லி நாடாளுமன்றத்தில் பேரணியில்ஈடுபட்ட ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் எம்.பி.க்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
இதையும் படிக்க | தில்லியில் ராகுல் காந்தி உள்ளிட்ட எம்.பி.க்கள் கைது!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.