முகப்பு
இந்தியா

உத்தரப் பிரதேசம்: வகுப்பறையில் வைத்து பூட்டப்பட்ட மாணவர், 10 ஆசிரியர்கள் பணியிடை நீக்கம்

உத்தரப் பிரதேசத்தில் ஹத்ராஸ் மாவட்டத்தில் வகுப்பறையில் மாணவர் தூங்கியதை கவனிக்காமல் பள்ளியை மூடிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Updated On : 30 ஜூலை, 2022 at 3:22 PM
கோப்புப் படம்
பகிர்:

உத்தரப் பிரதேசத்தில் ஹத்ராஸ் மாவட்டத்தில் வகுப்பறையில் மாணவர் தூங்கியதை கவனிக்காமல் பள்ளியை மூடிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியர் உட்பட 10 ஆசிரியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். 

இந்த சம்பவம் தொடர்பாக அதிகாரிகள் கூறியதாவது: “ பிரேம் பிரகாஷ் என்ற இரண்டாம் வகுப்பு மாணவர் கடந்த புதன்கிழமை வகுப்பறையில் அசந்து தூங்கியுள்ளார். மாணவர் தூங்கியதை கவனிக்காமல் பள்ளியில் பணிபுரிபவர்களும், பள்ளி ஆசிரியர்களும் மாணவரை வகுப்பறையில் வைத்து பூட்டி விட்டு சென்றுள்ளனர். அந்த மாணவர் மாலை 5 மணிக்கு எழுந்து அழத் தொடங்கியதாக கூறப்படுகிறது. மாணவர் அழுகைக் குரலைக் கேட்ட அக்கம் பக்கத்தினர் பள்ளி வகுப்பறை நோக்கி விரைந்து மாணவர் உள்ளே வகுப்பறை உள்ளே வைத்து பூட்டப்பட்டதை அறிந்தனர். அந்த மாணவருடைய அப்பாவும் பள்ளிக்கு வர, அவர்கள் பள்ளி வகுப்பறையின் கதவினை உடைத்து மாணவரை மீட்டனர்.” என்றனர்.

இந்த சம்பவம் குறித்த தகவலறிந்த அந்தப் பகுதியின் வட்டார கல்வி அலுவலர், இது குறித்து விசாரிக்க உத்தரவிட்டார். 

முதல் கட்ட விசாரணைக்குப் பிறகு அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியர் உட்பட 10 ஆசிரியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.