இந்தியா

மகாராஷ்டிரத்தில் 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு: 94.22% தேர்ச்சி

மகாராஷ்டிரத்தில் 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன. இந்த தேர்வில் 94.22 சதவீத மாணவர்கள் தேர்ச்சியடைந்துள்ளனர். 

DIN

மகாராஷ்டிரத்தில் 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன. இந்த தேர்வில் 94.22 சதவீத மாணவர்கள் தேர்ச்சியடைந்துள்ளனர். 

இந்தாண்டு 12-ம் வகுப்பு தேர்வில் மாணவர்களை விட மாணவிகள் சிறப்பாகச் செயல்பட்டுள்ளனர்.

வாரிய தலைவர் ஷரத் கோசாவி அறிவித்த முடிவுகளின்படி, 

இந்தாண்டு மாணவிகளின் தேர்ச்சி 95.35 சதவீதமாகவும், மாணவர்களின் தேர்ச்சி 93.29 சதவீதமாகவும் உள்ளனர். 

12-ம் வகுப்பு தேர்வில் இந்தாண்டு மொத்தம் 14,59,664 மாணவர்கள் தேர்வுக்கு பதிவு செய்துள்ளனர்.அவர்களில் 14,39,731 மாணவர்கள் தேர்வு எழுதியதில் 13,56,604 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

மாநிலத்தில் கொங்கன் பிரிவு 97.21 சதவீத தேர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. அதைத் தொடர்ந்து நாக்பூர் - 96.52 சதவீதம், அமராவதி - 96.34 சதவீதம், லத்தூர்- 95.25 சதவீதம், கோலாப்பூர்- 95.07 சதவீதம், நாசிக்- 95.03 சதவீதம், அவுரங்காபாத்- 94.97 சதவீதமும், புணே- 93.61 சதவீதமும், மும்பை பிரிவு 90.91 சதவீத தேர்ச்சி சதவீதத்தைப் பதிவு செய்தது.

அறிவியல் பிரிவில் 98.30 சதவீதமும், கலைப் பிரிவில் 90.51 சதவீதமும், வணிகவியல் பிரிவில் 91.71 சதவீதமும், தொழிற்கல்வி பாடப்பிரிவில் 92.40 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளதாக கோசாவி தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஃபிஃபா தரவரிசை: ஸ்பெயின் முதலிடம்..! 28 மாதங்களுக்குப் பின் கீழிறங்கிய ஆர்ஜென்டீனா!

கிருஷ்ணகிரி அணையிலிருந்து நீர் திறப்பு! 3 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

வாக்குத் திருட்டு இப்படித்தான் நடக்கிறது! - ராகுல் காந்தி

தில்லி கலவர வழக்கு: உமர் காலித் உள்ளிட்ட நால்வரின் ஜாமீன் மனு ஒத்திவைப்பு

திருவள்ளூர் உள்பட 6 மாவட்டங்களில் இன்று கனமழை!

SCROLL FOR NEXT