குஜராத்தில் 2 நாள்களுக்கு முன்னதாகவே தொடங்கிய பருவமழை
குஜராத்தில் தென்மேற்குப் பருவமழை இரண்டு நாள்களுக்கு முன்னதாகவே இன்று தொடங்கியுள்ளது.
குஜராத்தில் தென்மேற்குப் பருவமழை இரண்டு நாள்களுக்கு முன்னதாகவே இன்று தொடங்கியுள்ளது.
இதுகுறித்து வானிலை ஆய்வு மையத்தின் தலைவர் மனோரமா மொகந்தி கூறுகையில்,
பொதுவாக மாநிலத்தில் பருவமழை ஜூன் 15-ம் தேதி தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படும். ஆனால், இந்தாண்டு தென்மேற்கு பருவமழை 2 நாள்களுக்கு முன்னதாகவே குஜராத்தைத் தொட்டுள்ளது.
குஜராத்தின் சில பகுதிகளில் பருவமழை அதிகரிப்பதற்கான சூழ்நிலை சாதகமாக இருப்பதாகவும், அடுத்த ஐந்து நாள்களுக்கு மாநிலத்தின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் வாசிக்கலாம்: கரோனா உச்சம் இயல்பானவை: முகக்கவசம், பூஸ்டர் அவசியம் என்கின்றனர் நிபுணர்கள்
சௌராஷ்டிரா-கட்ச் மற்றும் யூனியன் பிரதேசமான டையூ-டாமன் மற்றும் தாத்ரா நகர் ஹவேலி என குஜராத்தின் அனைத்து மாவட்டங்களிலும் அடுத்த 5 நாள்களுக்கு லேசானது முதல் மிதமான மழையும், சில இடங்களில் இடியுடன் கூடிய மழையும் பெய்யக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வடக்கு குஜராத்தில் உள்ள மஹிசாகரில் அதிக மழை பெய்து வருகிறது. இதுவரை அங்கு 76 மி.மீ மழை பதிவாகியுள்ளது. இன்று சூரத், கெடா, ஆரவல்லி, அகமதாபாத் மற்றும் ஆனந்த் மாவட்டத்தின் சில பகுதிகளிலும் மழை பெய்துள்ளது.
மோர்பி மாவட்டத்தில், வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழந்ததாக போலீஸார் தெரிவித்தனர்.