இந்தியா

காங்கிரஸ் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் தில்லி வர உத்தரவு?

DIN

காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அனைத்து எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ.க்களும் தில்லி வர கட்சித் தலைமை உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நேஷனல் ஹெரால்டு பத்திரிகைக்குத் தொடர்புடைய பணமோசடி வழக்கில் காங்கிரஸ் மூத்த தலைவரும் எம்.பி.யுமான ராகுல் காந்தியிடம் அமலாக்கத் துறை தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் காங்கிரஸ் பிரமுகர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனிடையே, ஜூன் 23ஆம் தேதி காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆஜராக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. மேலும், 5வது முறையாக நாளை ராகுல் காந்தி ஆஜராகவும் சம்மன் அனுப்ப வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், அமலாக்கத்துறையின் இந்த நடவடிக்கையை எதிர்த்தும், அக்னிபத் திட்டத்திற்கு எதிராகவும் போராட்டத்தை வலுப்படுத்தும் நோக்கில், அனைத்து மாநிலங்களில் உள்ள காங்கிரஸ் எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ.க்களை இன்று இரவுக்குள் தில்லி வர கட்சி தலைமை உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குடிநீா் தொடா்பான புகாா்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்: அரியலூா் மாவட்ட கண்காணிப்பு அலுவலா்

ஜெயேந்திரா மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளி 100% தோ்ச்சி

வாழையூா் கரும்பாயிரம் கோயிலில் வெள்ளி ரத புறப்பாடு

திருவாங்கூா் தேவசம் போா்டு அறிவிப்பை திரும்பப் பெற வலியுறுத்தல்

அரியலூா் சிறுமி கொலை வழக்கில் மூவா் விடுவிக்கப்பட்டதை எதிா்த்து மேல்முறையீடு: உ. வாசுகி பேட்டி

SCROLL FOR NEXT