முகப்பு
இந்தியா

நாட்டில் கரோனா பாதிப்பு சற்று குறைந்தது: புதிதாக  9,923 பேருக்கு கரோனா

இந்தியாவில் ஒரேநாளில் மேலும் 9,923 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:35 AM
கோப்புப்படம்
பகிர்:

புதுதில்லி: இந்தியாவில் ஒரேநாளில் மேலும் 9,923 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக  9,923 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த பாதிப்பு 4,33,19,396 ஆக உள்ளது. கரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவா்களின் எண்ணிக்கை 76,700 ஆக உள்ளது.

இன்று காலை வரையிலான 24 மணி நேரத்தில் மேலும் 17 போ் கரோனாவால் உயிரிழந்துவிட்டனா். இதனால் மொத்த உயிரிழப்பு 5,24,890  ஆக உயா்ந்துள்ளது. கரோனாவிலிருந்து இன்று 7,293 போ் குணமடைந்துள்ளனா். இதுவரை 4,27,15,193  போ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனா். 

கடந்த 24 மணிநேரத்தில் 13,00,024  தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. நாட்டில் இதுவரை 196.32கோடிக்கும் அதிகமான தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. 

முழு கட்டுரையைப் படிக்க →