கோப்புப்படம் 
இந்தியா

மக்களிடம் வெறுப்பை பரப்பி நாட்டை ஆள்கின்றனர்: எம்.பி., ராகுல் காந்தி 

மக்கள் மீது கோபத்தையும், வெறுப்பையும் பரப்பி தேசத்தைப் பிளவுபடுத்துகிறார்கள் என்று காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி கோழிக்கோட்டில் இன்று நடைபெற்ற விழாவில் மத்திய அரசைக் கடுமையாகத் தாக்கி பேசினார்.

DIN

கோழிக்கோடு: மக்கள் மீது கோபத்தையும், வெறுப்பையும் பரப்பி தேசத்தைப் பிளவுபடுத்துகிறார்கள் என்று காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி கோழிக்கோட்டில் இன்று நடைபெற்ற விழாவில் மத்திய அரசைக் கடுமையாகத் தாக்கி பேசினார்.

முக்கம் முஸ்லிம் அனாதை இல்லத்தின் கட்டிட திறப்பு விழாவில் காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தி பேசியதாவது:

மத்திய அரசாங்கத்தின் கோபத்தின் விளைவு பொருளாதாரத்தில் பிரதிபலிக்கிறது. வேலையில்லாத் திண்டாட்டம் மற்றும் பொருட்களின் விலை உயர்ந்து வருகிறது. ஆளும் அரசு மக்கள் மீது கோபத்தையும், வெறுப்பையும் பரப்புகிறார்கள். நாட்டைப் பிளவுபடுத்துகிறார்கள் என்பது தெளிவாகத் தெரிகிறது என்று ராகுல் காந்தி கூறினார்.

மேலும், வெறுப்புக்கு வெறுப்பு அல்லது கோபத்துடன் பதிலளிப்பது தீர்வாகாது. வெறுப்பை எதிர்த்துப் போராடுவதற்கான ஒரே வழி அன்பு மற்றும் பாசம் மட்டுமே என்று ராகுல் காந்தி கூறினார்.

இதற்கு முன் வயநாட்டில் காங்கிரஸ் அலுவலகத்தை திறந்து வைத்து பேசிய அவர், காங்கிரஸ் அலுவலகம் மாவட்ட மக்களுக்கு ஆயுதமாக இருக்க வேண்டுமேத் தவிர  வன்முறைக்காக இல்லை என எம்.பி., ராகுல் காந்தி கூறினார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்தியாவுடன் ஒப்பந்தம் : அனைத்து வணிக ஒப்பந்தங்களுக்கும் தாய்! ஐரோப்பிய யூனியன்

உணவு வழங்கி, ஸ்டிக்கர்கள் ஒட்டி மக்களுக்கு விசில் சின்னத்தை அறிமுகம் செய்யும் தவெகவினர்!

இந்திய அணிக்காக 10 ஆண்டுகள்..! ஆல்-ரவுண்டர் ஹார்திக் பாண்டியா நெகிழ்ச்சி!

”அவருக்கு இல்லாத அழுத்தம் எங்களுக்கு மட்டுமா?” செங்கோட்டையனுக்கு டிடிவி பதில்!

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 19 காசுகள் மீண்டு ரூ.91.71ஆக நிறைவு!

SCROLL FOR NEXT