முகப்பு
இந்தியா

ஸ்ரீநகரில் பாஜக தலைவரின் வீட்டிற்குள் புகுந்த சிறுத்தை

ஸ்ரீநகரில் பாஜக தலைவரின் வீட்டில் சிறுத்தை புகுந்ததால் அங்குப் பரபரப்பு ஏற்பட்டது. 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:46 AM
கோப்புப்படம்
பகிர்:

ஸ்ரீநகரில் பாஜக தலைவரின் வீட்டில் சிறுத்தை புகுந்ததால் அங்குப் பரபரப்பு ஏற்பட்டது. 

பாஜக பொதுச்செயலாளர் அசோக் கௌல் சர்ச் லேனில் உள்ள அவரது வீட்டில் இன்று காலை நடைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்தார். அப்போது புல்வெளியில் திடீரென ஒரு சிறுத்தை தனது வீட்டை நோக்கிப் படையெடுத்தது. 

அதிர்ச்சியடைந்த கௌல் சிறிது நேரத்தில் சிறுத்தையிடமிருந்து அதிர்ஷ்டவசமாகத் தப்பியுள்ளார். பின்னர் வனத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. 

சம்பவ இடத்துக்கு வந்த வனவிலங்கு துறையினர் கூண்டு வைத்து சிறுத்தையைப் பிடித்தனர். பின்னர் இங்குள்ள தச்சிகம் தேசிய பூங்காவில் சிறுத்தை விடப்பட்டது.
 

முழு கட்டுரையைப் படிக்க →