இந்தியா

கையிருப்பில் 17 கோடி தடுப்பூசிகள்: மத்திய அரசு விளக்கம்

DIN


நாடு முழுவதுமுள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் தற்போது வரை 17 கோடி தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளதாக மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. 

இது குறித்து மத்திய சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், மத்திய அரசு சார்பில், மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் 193.53 கோடி கரோனா தடுப்பூசி வழங்கப்பட்டது. இலவசமாக வழங்கப்பட்ட தடுப்பூசிகளில் தற்போதுவரை 17 கோடிக்கும் அதிகமான தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன. 

2021 ஜூன் 21 முதல் நாடு முழுவதும் கரோனா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டதன் விளைவாக 75 சதவிகிதம் தடுப்பூசிகளை உற்பத்தி நிறுவனங்கள் வழங்கின. அனைத்துப் பகுதிகளிலும் தடுப்பூசி செலுத்தும் பணிகளை படிப்படியாக மத்திய அரசு வேகப்படுத்தியது. 

தடுப்பூசி செலுத்தும் பணிகள் 2021 ஜனவரி 16ஆம் தேதி முதல் தொடங்கியது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முதுமலையில் யானைகள் கணக்கெடுப்பு தொடங்கியது

உதகை மலை ரயில் இன்று ரத்து!

காஸாவின் பல்வேறு இடங்களில் இஸ்ரேல் தாக்குதல்: 23 பேர் பலி!

தனுஷ்கோடி செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு தடை

புணே படகு விபத்து: 5 சடலங்கள் மீட்பு

SCROLL FOR NEXT