முகப்பு
இந்தியா

வெள்ளம் வந்தாலும் விடுமுறை கிடையாதா? படகில் பள்ளி செல்லும் அசாம் குழந்தைகள்

அசாம் மாநிலத்தில் கனமழை காரணமாக கடுமையான வெள்ளம் ஏற்பட்டிருக்கும் நிலையில், தேமாஜி மாவட்டத்தில் ஆரம்ப பள்ளி மாணவர்களை அவர்களது பெற்றோர் படகில் அழைத்து வந்து விட்டுச் செல்கிறார்கள்.

Updated On : 20 மே, 2022 at 4:59 PM
வெள்ளம் வந்தாலும் விடுமுறை கிடையாதா? படகில் பள்ளி செல்லும் அசாம் குழந்தைகள்
பகிர்:


தேமாஜி: அசாம் மாநிலத்தில் கனமழை காரணமாக கடுமையான வெள்ளம் ஏற்பட்டிருக்கும் நிலையில், தேமாஜி மாவட்டத்தில் ஆரம்ப பள்ளி மாணவர்களை அவர்களது பெற்றோர் படகில் அழைத்து வந்து விட்டுச் செல்கிறார்கள்.

விஷ்ணுபூர் பகுதியில் இயங்கி வரும் துவக்கப் பள்ளி வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளது. இந்தப் பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர் கூறுகையில், எங்கள் துவக்கப் பள்ளியில் சுமார் 29 மாணவர்கள் இருக்கிறார்கள். வெள்ளம் காரணமாக பல மாணவர்கள் பள்ளிக்கு வர முடியாமல் தவிக்கிறார்கள். சில பெற்றோர் படகு மூலம் பிள்ளைகளை அழைத்து வந்து பள்ளியில் விட்டுவிட்டுச் செல்கிறார்கள் என்கிறார்.

அசாம் மாநிலத்தில் தொடர் கனமழை காரணமாக 29 மாவட்டங்களை சூழ்ந்துள்ள வெள்ளத்தால் சுமார் 7 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அசாம் மாநில பேரிடர் மேலாண்மை அமைப்பு தெரிவித்துள்ளது.

Advertisement

சுமார் 1400 கிராமங்கள் நீருக்குள் மூழ்கியுள்ளன. நகோன் மாவட்டம் மிகவும் மோசமாக மாவட்டங்களில் முதன்மையானதாக உள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.