முகப்பு
இந்தியா

வீதியில் இறங்கி நடந்து மக்களின் வரவேற்பை ஏற்ற பிரதமர் மோடி! (விடியோ)

பாஜக விழாவில் கலந்துகொள்வதற்காக சிம்லா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு அங்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. 

Updated On : 31 மே, 2022 at 1:45 PM
சிம்லாவில் வீதியில் இறங்கி நடந்து மக்களின் வரவேற்பை ஏற்ற பிரதமர் மோடி.
பகிர்:

பாஜக விழாவில் கலந்துகொள்வதற்காக சிம்லா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு அங்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. 

பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சி 8 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இதையடுத்து மே 30 முதல் ஜூன் 14 ஆம் தேதி வரை இரு வாரங்களுக்கு நாடு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகளை பாஜக ஏற்பாடு செய்துள்ளது. 

அந்தவகையில் இமாச்சலப் பிரதேச மாநிலம் சிம்லாவில் மத்திய அரசின் பல்வேறு திட்டங்களின் மூலமாக  பயனடைந்த மக்களிடம் பிரதமர் மோடி கலந்துரையாடுகிறார். அங்கு நடைபெறும் சிறப்பு மாநாட்டிலும் உரையாற்றுகிறார். இந்த விழாவில் காணொலி மூலமாக பல்வேறு மாநில பாஜக முதல்வர்கள், அமைச்சர்கள் கலந்துகொள்ளவிருக்கின்றனர். 

Advertisement

இதையொட்டி சிம்லாவிற்கு வந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு பாஜக தொண்டர்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர். சாலையில் நடந்துவந்து அவர் தொண்டர்களின் வரவேற்பை ஏற்றுக்கொண்டார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.