இந்தியா

வேட்பாளர் பெயரே அவசியமில்லை, தாமரை சின்னமே போதும்: பிரதமர் மோடி

சுயநலம் குறித்து மட்டுமே சிந்திக்கும் குழுக்கள் தங்களை நேர்மையானவர்கள் என கூறிக் கொள்வதாக பிரதமர் நரேந்திர மோடி ஹிமாசல் மக்களை எச்சரித்துள்ளார்.

DIN

சுயநலம் குறித்து மட்டுமே சிந்திக்கும் குழுக்கள் தங்களை நேர்மையானவர்கள் என கூறிக் கொள்வதாக பிரதமர் நரேந்திர மோடி ஹிமாசல் மக்களை எச்சரித்துள்ளார்.

தங்களை மிகவும் நேர்மையானவர்கள் என கூறிக் கொள்ளும் அந்த குழுக்கள் ஊழல் மற்றும் சதிச் செயல்களில் ஈடுபட்டு சமுதாயத்தை பிளவுப்படுத்தி வருவதாகவும் அவர் தெரிவித்தார். 

தங்களது கட்சி மிகவும் நேர்மையாக செயல்பட்டு வருவதாக கூறி வரும் ஆம் ஆத்மியினை தாக்கும் விதமாக பிரதமர் கூறியிருப்பது பார்க்கப்படுகிறது. ஹிமாசலில் சட்டப்பேரவைத் தேர்தல் வருகிற நவம்பர் 12 அன்று நடைபெற உள்ளது. ஏற்கனவே பாஜக மற்றும் காங்கிரஸ் தேர்தல் பிரசாரங்களில் ஈடுபட்டுள்ள நிலையில் மூன்றாவது போட்டியாளராக ஆம் ஆத்மி ஹிமாசலில் களமிறங்கியுள்ளது. 

இது குறித்து பிரதமர் மோடி பேசியதாவது: காங்கிரஸ் என்றால் ஊழல் மற்றும் சுயநல அரசியல் செய்பவர்கள் என்றுதான் பொருள். பாஜகவின் வேலை தெளிவாகவும், முன்னேற்றப் பாதையை நோக்கியும் உள்ளது. ஆனால், காங்கிரஸில் நிலையில்லாத் தன்மையே நிலவுகிறது. ஹிமாசலுக்கு பாஜக அரசு தேவை. ஹிமாசலுக்கு நிலையான அரசினை பாஜகவால் மட்டுமே கொடுக்க முடியும். கடந்த முப்பது ஆண்டுகளாக தில்லியில் நிலையான அரசு என்பது இல்லை. தேர்தல் செலவுக்காக பல ஆயிரம் கோடிகள் பல முறை வீணடிக்கப்பட்டது. பின்னர், மக்கள் நிலையான அரசு வேண்டும் என முடிவு செய்து 2014ஆம் ஆண்டு பாஜகவினை ஆட்சியில் அமரச் செய்தனர்.

சிறிய மாநிலங்கள் பல ஆண்டுகளாக நிலையில்லா அரசுகளாலேயே ஆட்சி செய்யப்பட்டு வந்தன. ஆனால், அந்த மாநிலங்கள் நிலையான பாஜக அரசை தேர்ந்தெடுத்துள்ளன. உத்தரகண்ட் மற்றும் கோவா போன்ற மாநிலங்களே அதற்கு உதாரணம். காங்கிரஸ் ஆட்சியின்போது சுயநலம் மிகுந்த குழுக்கள் உருவாகி நிலையில்லா அரசினை நாட்டில் உருவாக்கின. ஹிமாசலிலும் அவர்கள் அதனையே செய்தனர். அதனால் தான் அவர்கள் நிலையான அரசு அமைவதைத் தடுக்க நினைக்கின்றனர். சிறிய மாநிலங்களையே இந்த சுயநலம் மிக்க குழுக்கள் தங்களது இலக்காக பார்க்கின்றனர். பொய்யான தேர்தல் வாக்குறுதிகளை அளித்து சில இடங்களில் வெற்றி பெற்று தங்களது சுய நலத்திற்காக செயல்பட்டு வருகின்றனர். அவர்கள் தங்களை மிக்க நேர்மையானவர்கள் என அழைத்துக் கொள்கின்றனர். ஆனால், அவர்கள் தான் மிகவும் ஊழலில் திளைத்து இந்த சமுதாயத்தை பிளவுப்படுத்த நினைப்பவர்கள். அந்த சுயநலமிக்க குழுக்களிடம் ஹிமாசல் மக்கள் கவனமாக இருக்க வேண்டும். நீங்கள் வாக்களிக்க செல்லும்போது பாஜக வேட்பாளரை ஞாபகம் வைத்திருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. நீங்கள் தாமரை சின்னத்தை நினைவில் வைத்திருந்தால் மட்டும் போதுமானது. நான் உங்களிடத்தில் தாமரையை எடுத்து வருகிறேன். நீங்கள் எங்கு தாமரை சின்னத்தைப் பார்த்தாலும் அதற்கு பாஜக என்றும் மோடி உங்களைத் தேடி வந்திருக்கிறார் என்றும் அர்த்தம் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஒளி நீ... ரம்யா பசுபுலேட்டி!

சி.பி. ராதாகிருஷ்ணன் வெற்றி: குடியரசு துணைத் தலைவராகிறார்! 452 வாக்குகளுடன் வெற்றி!

மலர்களே மலரட்டும்... சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி!

குடியரசு துணைத் தலைவராகிறார் சி.பி. ராதாகிருஷ்ணன்! தேர்தலில் வெற்றி! செய்திகள்: சில வரிகளில் |9.9.25

கத்தார் மக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்: இஸ்ரேலுக்கு கடும் கண்டனம்!

SCROLL FOR NEXT