இந்தியா

குஜராத் தேர்தல்: பாஜக மீது குற்றப் பத்திரிகை தாக்கல் செய்த காங்கிரஸ்

குஜராத்தில் ஆட்சியில் உள்ள பாஜக அரசு மீது காங்கிரஸ் குற்றப் பத்திரிகையைத் தாக்கல் செய்துள்ளது.

DIN

குஜராத்தில் ஆட்சியில் உள்ள பாஜக அரசு மீது காங்கிரஸ் குற்றப் பத்திரிகையைத் தாக்கல் செய்துள்ளது.

இந்த குற்றப் பத்திரிகையில் மக்களுக்கு எதிராக பாஜக செய்துள்ள 22 குற்றங்களை காங்கிரஸ் பட்டியலிட்டுள்ளது. குஜராத் மக்கள் பசி மற்றும் பயத்தில் இருப்பதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


அண்மையில் நடைபெற்ற மோர்பி தொங்கு பால விபத்து குறித்து அந்த குற்றப் பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மோர்பி தொங்கு பால விபத்தில் 135 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் குஜராத் மக்களை சோகத்தில் ஆழ்த்தியது. அதேபோல பில்கிஸ் பனோ கூட்டுப் பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட 11 குற்றவாளிகளை விடுதலை செய்தது குறித்தும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது போன்று பல்வேறு குற்றச்சாட்டுகள் பாஜக மீது காங்கிரஸ் சார்பில் முன்வைக்கப்பட்டுள்ளது.

குஜராத்தில் உள்ள 182 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் இரண்டு கட்டங்களாக நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள நிலையில் காங்கிரஸ் பாஜக மீது குற்றப் பத்திரிகை தாக்கல் செய்திருப்பது முக்கியத்துவம் பெறுகிறது.

குஜராத் சட்டப்பேரவைத் தேர்தல் டிசம்பர் 1 மற்றும் 5 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குழித்துறையில் நாளை மின்நிறுத்தம்

வேலூா் ஆட்சியா் அலுவலகம் முன் நிற்காத அரசுப் பேருந்துகள்: அரசு ஊழியா்கள் அவதி

யமுனையை பாதுகாக்க விழிப்புணா்வு நிகழ்ச்சி தொடக்கம்

மழை நீா் தேங்கிய வயல்களை பாதுகாக்கும் வழிமுறைகள்

கடன் தொல்லை: வியாபாரி தற்கொலை

SCROLL FOR NEXT