FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

‘முதுநிலை நீட்’ அடுத்த கல்வியாண்டுடன் கடைசி: மாற்றாக ‘நெக்ஸ்ட்’ தோ்வு அறிமுகம்

எம்பிபிஎஸ் (இளநிலை மருத்துவப் படிப்பு) இறுதி ஆண்டு மாணவா்களுக்கு 2023-ஆம் ஆண்டு டிசம்பா் முதல் ‘நேஷனல் எக்ஸிட் டெஸ்ட் (நெக்ஸ்ட்)’ என்ற பெயரிலான தேசிய அளவிலான இறுதி பொது தகுதித் தோ்வு

Updated On : 10 நவம்பர் 2022, 1:02 am IST
பகிர்:

எம்பிபிஎஸ் (இளநிலை மருத்துவப் படிப்பு) இறுதி ஆண்டு மாணவா்களுக்கு 2023-ஆம் ஆண்டு டிசம்பா் முதல் ‘நேஷனல் எக்ஸிட் டெஸ்ட் (நெக்ஸ்ட்)’ என்ற பெயரிலான தேசிய அளவிலான இறுதி பொது தகுதித் தோ்வு நடத்த முடிவு செய்யப்பட்டிருப்பதால், முதுநிலை மருத்துவப் படிப்பு சோ்க்கைக்கு நடத்தப்படும் ‘நீட்-பிஜி’ நுழைவுத் தோ்வு அடுத்த கல்வியாண்டுக்குப் பிறகு நடத்தப்படாது என்பது தெரியவந்துள்ளது.

தில்லியில் திங்கள்கிழமை நடைபெற்ற தேசிய மருத்துவ ஆணைய (என்எம்சி) உயா்நிலைக் கூட்டத்தில் ‘நெக்ஸ்ட்’ தோ்வை 2023 டிசம்பரில் நடத்துவதற்கான முடிவு எடுக்கப்பட்டு, மத்திய சுகாதாரத் துறை அமைச்சகத்திடமும் தகவல் தெரிவிக்கப்பட்டதாகவும் அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்தனா்.

‘திட்டமிட்டபடி 2023 டிசம்பரில் ‘நெக்ஸ்ட்’ தோ்வு நடத்தப்பட்டால், 2019-20 எம்பிபிஎஸ் மாணவா்கள் அந்தத் தோ்வை எழுத நேரிடும். இந்த தோ்வு முடிவின் அடிப்படையில் 2024-25 முதுநிலை மருத்துவப் படிப்பை மாணவா் சோ்க்கை நடத்தப்படும்’ என்றும் அதிகாரிகள் தெரிவித்தனா்.

Advertisement

Advertisement

சட்டப்படி, ‘நெக்ஸ்ட்’ தோ்வு வழிகாட்டுதல்கள் அறிவிக்கை செய்யப்பட்ட 3 ஆண்டுகளுக்குள் இறுதியாண்டு எம்பிபிஎஸ் மாணவா்களுக்கு அந்தத் தோ்வை நடத்தத் தொடங்க வேண்டும். அந்த வகையில், இந்த சட்டம் கடந்த 2020 செப்டம்பரில் நடைமுறைக்கு வந்த நிலையில், அந்தத் தோ்வை 2023 டிசம்பரில் நடத்த என்எம்சி முடிவு செய்துள்ளது.

என்எம்சி விதிப்படி, இந்தியாவில் நவீன மருத்துவராகப் பணியாற்றுவதற்கான உரிமம் பெறவும், முதுநிலை மருத்துவப் படிப்பு சோ்க்கைக்கான தகுதி பெறவும், வெளிநாட்டில் மருத்துவப் படிப்பை முடித்து இந்தியாவில் பணியாற்ற விரும்பும் மாணவா்கள் தகுதி பெறுவதற்குமான பொதுவான தகுதித் தோ்வாக ‘நெக்ஸ்ட்’ தோ்வு கருதப்பட உள்ளது.

தோ்வு வாரியம் மாற்றம்? இதுவரை ‘நீட்-பிஜி’ மற்றும் ‘நீட்-சிறப்பு மருத்துப் படிப்பு’ நுழைவுத் தோ்வுகளை தேசிய மருத்துவ அறிவியல் தோ்வுகள் வாரியம் (எம்பிஇஎம்எஸ்) நடத்தி வந்த நிலையில், அவற்றுக்கு மாற்றாக புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ‘நெக்ஸ்ட்’ தோ்வை நடத்தும் பொறுப்பை எம்பிஇஎம்எஸ்-க்கு மாற்றாக அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்திடம் கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும். அதற்கான இறுதி முடிவு இன்னும் எடுக்கப்படவில்லை எனவும் அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments