டிச. 4ல் காங்கிரஸ் வழிகாட்டுதல் குழுவின் முதல் கூட்டம்! கார்கே தலைமையில் நடைபெறுகிறது
காங்கிரஸ் வழிகாட்டுதல் குழுவின் முதல் கூட்டம் வருகிற டிசம்பர் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.
காங்கிரஸ் வழிகாட்டுதல் குழுவின் முதல் கூட்டம் வருகிற டிசம்பர் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.
கடந்த மாதம் நடைபெற்ற காங்கிரஸ் தலைவர் தேர்தலில் மல்லிகார்ஜுன கார்கே வெற்றி பெற்றார். அவர் வெற்றி பெற்ற பிறகு காங்கிரஸ் காரிய கமிட்டி கலைக்கப்பட்டு 47 பேர் கொண்ட புதிய காங்கிரஸ் வழிகாட்டுதல் குழு அமைக்கப்பட்டது.
இதில், சோனியா காந்தி, ராகுல் காந்தி, மன்மோகன் சிங், ஆனந்த் ஷர்மா, திக்விஜய் சிங், பிரியங்கா காந்தி, தமிழகத்தைச் சேர்ந்த ப.சிதம்பரம், மாணிக்கம் தாகூர் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர். இதன் தலைவராக மல்லிகார்ஜுன கார்கே இருப்பார் என்று தெரிவிக்கப்பட்டது. இந்தக் குழுவில் சசி தரூர் இடம்பெறாதது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில், காங்கிரஸ் வழிகாட்டுதல் குழுவின் முதல் கூட்டம் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் வருகிற டிசம்பர் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர், டிசம்பர் 7 ஆம் தேதி தொடங்கவுள்ளதையடுத்து கூட்டத்தொடரில் எடுத்துரைக்க வேண்டிய பிரச்னைகள், பின்பற்ற வேண்டிய வியூகம் குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் காங்கிரஸ் மாநாடு நடத்துவது குறித்தும் ஆலோசிக்கப்படும் என்று தெரிகிறது.
இதையும் படிக்க | சமந்தாவுக்கு என்ன ஆச்சு? மீண்டும் மருத்துவமனையில் அனுமதி