இந்தியா

கார் விலை 11 லட்சம்... ரிப்பேர் செய்ய ரூ.22 லட்சமா? கலங்கும் உரிமையாளர்கள்

DIN


பெங்களூரு.. அண்மையில் பெய்த கனமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு மெல்ல மீண்டு வருகிறது. வீடு, நிறுவனம், சாலை என எந்த பேதமும் பார்க்காமல் வெள்ளம் ருத்ர தாண்டவம் ஆடிவிட்டுச் சென்றிருக்கிறது.

ஏராளமான கட்டடங்கள் பல நாள்களாக வெள்ளத்தில் மிதந்து கொண்டிருந்தது. பல மாடிவீட்டு நபர்கள் கூட மின்சாரம் இல்லாததால் வீட்டில் இருக்க முடியாமல் வெளியேறினர். கோடிக் கணக்கில் கொட்டிக் கொடுத்து வாங்கிய வீடோ அல்லது கம்பெனி கொடுத்த அறையோ எதிலும் தங்க முடியாமல், விடுதிகளுக்கும் ஹோட்டல்களுக்கும் படையெடுத்தனர் மக்கள்.

பல லட்சம் மதிப்புள்ள கார்கள் வெள்ளத்தில் மிதக்க, அருகில் இருந்த கிராமங்களிலிருந்து வந்த டிராக்டர்களில் பள்ளிக்கும் அலுவலகத்துக்கும் சென்று வந்தவர்கள் பலர்.

வெள்ளம் வடிந்துவிட்டது. வீடுகள், நிறுவனங்கள் சரியாகவிட்டன. ஆனால், வெள்ளத்தில் மூழ்கிக் கிடந்த கார்களை என்ன செய்வது.

கார்களை சரி செய்ய நிறுவனத்துக்கும் தனியார் மெக்கானிக் கடைகளுக்கும் அனுப்பும் உரிமையாளர்களின் கண்களில் ரத்தக் கண்ணீர் வடிகிறதாம்.

அனிருத் என்பவர் தனது லிங்கேதன் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் தகவலைப் படித்தாலே காரணம் புரியும்.

தனது காரை ரிப்பேர் செய்ய அவர் கார் நிறுவனத்துக்கு அனுப்பியிருந்தார். அங்கு கார் சரி செய்யப்படுவதற்கான உத்தேசக் கட்டணத்தை அனுருத் கேட்டிருந்தார். அதில், மொத்தக் கட்டணம் என்ற இடத்தில் ரூ.22 லட்சம் என்று போடப்பட்டிருந்தது. இதைப் பார்த்ததும் இரண்டு கார் வாங்கியிருக்கலாமே என்று கதறியிருக்கிறார் அனிருத். காரணம் அவர் ரிப்பேருக்கு அனுப்பிய காரின் விலையே ரூ.11 லட்சம்தான்.

இதில் அவர் கார் நிறுவனம் மற்றும் காப்பீட்டு நிறுவனங்கள் தரப்பில் சந்தித்த அவலங்களையும் பகிர்ந்து கொண்டுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நிறைவடைந்தது நீட் தேர்வு!

யாரோ இவள்..!

செயில் நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: விண்ணப்பிப்பது எப்படி?

பஞ்சாப் கிங்ஸுக்கு 168 ரன்கள் இலக்கு நிர்ணயித்த சிஎஸ்கே!

மனிதம் மட்டும் இங்கே மலிவுதான்!

SCROLL FOR NEXT