இந்தியா

தில்லியில் 66 ஆண்டுகள் இல்லாத அளவு மழைப்பொழிவு பதிவு

தில்லியில் நடப்பு அக்டோபர் மாதம் 66 ஆண்டுகள் இல்லாத அளவு மழை பொழிந்துள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

DIN

தில்லியில் நடப்பு அக்டோபர் மாதம் 66 ஆண்டுகள் இல்லாத அளவு மழை பொழிந்துள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.  

தில்லி உள்ளிட்ட வடக்கு மாநிலங்கள் கடந்த சில தினங்களாக நல்ல மழையைப் பெற்றுள்ளன. தில்லியில் நடப்பு அக்டோபர் மாதம் மட்டும் 128.2 மி.மீ. மழை பொழிந்துள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

இது கடந்த 66 ஆண்டுகள் இல்லாத அளவு பதிவான ஒன்றாகும். கடந்த 1954ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் அதிகபட்சமாக 238.2 மி.மீ. மழை பொழிந்திருந்தது. 

இதன்மூலம் நான்காவது அதிகபட்ச மழைப்பொழிவை நடப்பு அக்டோபர் மாதம் பெற்றுள்ளது. தில்லியில் கடந்த ஆண்டு இதே மாதத்தில் 122.5 மி.மீ. மழை பொழிந்தது. தில்லியில் இந்த ஆண்டு இதுவரை 790 மி.மீ. மழை பெய்துள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சராசரியாக செப்டம்பர் மாதம் 125.1 மி.மீ. மழை பொழியும் நிலையில் நடப்பாண்டு வழக்கத்திற்கு அதிகமாக 164.5 மி.மீ. மழை பொழிந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாராட்டு நிச்சயம் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

கிராமப்புற மாணவா்களுக்கான ஆங்கில பேச்சுப் பயிற்சி

நொய்டாவில் தியாகராஜ ஆராதனை விழா

கந்திலி சந்தையில் ரூ. 2 கோடிக்கு வா்த்தகம்

போதை மாத்திரைகள் விற்பனை: பெண் உள்பட இருவா் கைது

SCROLL FOR NEXT