முகப்பு
இந்தியா

தெலங்கானாவில் 4-வது நாளாக ராகுல் நடைப் பயணம்!

தெலங்கானாவில் நான்காவது நாளாக காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி நடைப் பயணம் மேற்கொண்டுள்ளார். 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:41 AM
பகிர்:

தெலங்கானாவில் நான்காவது நாளாக காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி நடைப் பயணம் மேற்கொண்டுள்ளார். 

மத்தியில் ஆளும் பாஜகவுக்கு எதிராக மக்களை ஒன்றுதிரட்டும் நோக்கில் ‘பாரத் ஜோடோ’ நடைப் பயணத்தை காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி முன்னெடுத்துள்ளார். 

அதன்படி, தெலங்கானாவில் நான்காவது நாளாக மகபூப் நகரில் உள்ள தர்மபூரில் இருந்து தனது பயணத்தை மீண்டும் தொடங்கியுள்ளார்.

ராகுல் காந்தி இன்று மாலை ஜாட்செர்லா எக்ஸ் சாலை சந்திப்பில் ஒரு கூட்டத்தில் உரையாற்றுகிறார். 

இன்று காலை 6.30 மணியளவில் ராகுல் காந்தியுடன் ஏராளமான கட்சித் தலைவர்கள் யாத்திரையில் பங்கேற்றனர். நடைப் பயணத்தின்போது திரைப்பட நடிகை பூனம் கௌர் மற்றும் உஸ்மானியா பல்கலைக்கழக மாணவர்களும் இணைந்துள்ளனர். 

தமிழகத்தில் செப்.17-ம் தேதி தொடங்கிய நடைப் பயணமானது கேரளம், கர்நாடகம், ஆந்திரத்தைக் கடந்து தற்போது தெலங்கானா மாநிலத்தை அடைந்துள்ளது. 

ராகுல் காந்தி 16 நாள்கள் தெலங்கானாவில் பயணம் மேற்கொள்ளவிருக்கிறார். இதனிடையே நவம்பர் 4 ஆம் தேதி ஒருநாள் ஓய்வெடுக்க உள்ளதாகக் கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 

முழு கட்டுரையைப் படிக்க →