இந்தியா

பாரதம் இணைந்துதான் உள்ளது, புதிதாக இணைக்க வேண்டாம்: பாஜக

பாரதம் இணைந்துதான் உள்ளது புதிதாக இணைக்க வேண்டும் என்பதை மறந்து விடுங்கள் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் பாரதத்தை இணைப்போம் யாத்திரை குறித்து பாஜக விமர்சித்துள்ளது. 

DIN

பாரதம் இணைந்துதான் உள்ளது புதிதாக இணைக்க வேண்டும் என்பதை மறந்து விடுங்கள் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் பாரதத்தை இணைப்போம் யாத்திரை குறித்து பாஜக விமர்சித்துள்ளது. 

தேர்தல் தோல்வி, கட்சியிலிருந்து மூத்த தலைவர்களின் விலகல் போன்றவை காங்கிரஸுக்கும் மக்களுக்கும் இடையேயான தொடர்பு இல்லாமல் இருப்பதைக் காட்டுகிறது. முதலில் காங்கிரஸ் அதனை சரிசெய்ய வேண்டும் எனவும் பாஜக சார்பில் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சியில் நாட்டில் வெறுப்புணர்வு அதிகரித்துள்ளதாக ராகுல் காந்தி கூறியிருந்த நிலையில் பாஜக தரப்பில் இருந்து எழும் விமர்சனங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன.

பாரதத்தை இணைப்போம் பாத யாத்திரை குறித்து பாஜக செய்தித் தொடர்பாளர் ஷேசாத் பூனாவாலா கூறியதாவது: “ ராகுல் காந்தி மேற்கொண்டுள்ள பாரதத்தை இணைப்போம் பாத யாத்திரை வருகிற 2024 நாடாளுமன்றத் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பிரதமர் வேட்பாளராக அவர் போட்டியிடுவதற்காக மட்டுமே ஆகும். காங்கிரஸ் இரண்டு மக்களைத் தேர்தலில் தோல்வியைத் தழுவியுள்ளது. அதேபோல பல மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தலில் தோல்வியைத் தழுவியுள்ளது. இதை அனைத்தையும் ராகுல் காந்தி பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார். இந்தத் தோல்விகள் மக்களுக்கும், காங்கிரஸுக்கும் இடையேயான தொடர்பு உடைந்து விட்டது என்பதைத் தெளிவாக காட்டுகிறது. பாரதத்தை இணைக்க வேண்டும் என்பதை மறந்து விடுங்கள். ஏனென்றால், பாரதம் ஏற்கனவே இணைந்துதான் இருக்கிறது. நீங்கள் காங்கிரஸிலிருந்து விலகி சென்றவர்களை இணைக்க முயற்சி செய்யுங்கள். 

சர்தார் வல்லபாய் படேல் பாரதத்தை இணைத்தார். நேதாஜி சுபாஸ் சந்திர போஸின் செயல்கள் இந்திய மக்களை ஒன்றாக இணைத்துள்ளது.” என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

178 ரன்கள், 7 விக்கெட்டுகள்... சாதனையுடன் சொந்த ஊரில் ஆட்ட நாயகனான அலெக்ஸ் கேரி!

கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் விஜய் நாளை பங்கேற்பு!

100க்கு 100 புள்ளிகள்... டபிள்யூடிசி தரவரிசையில் முதலிடத்தில் நீடிக்கும் ஆஸி.!

இறந்த குழந்தையை பையில் கொண்டு சென்ற அவலம்!

பிக் பாஸ் 9: சூடுபிடிக்கும் போட்டி! இந்த வாரமும் இருவர் வெளியேற்றம்!!

SCROLL FOR NEXT