இந்தியா

கரோனா பேராபத்துக் காலத்தில் கூட இந்தியா இலவசங்கள் வழங்கவில்லை: யோகி ஆதித்யநாத்

DIN

உலக நாடுகளில் இந்தியா மட்டும் தான் கரோனா பேராபத்துக் காலத்தில் இலவசங்கள் வழங்கவில்லை என உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.

இருப்பினும், நாட்டில் உள்ள 80 கோடி மக்களுக்கு இலவச ரேஷன் பொருட்களை வழங்கி அரசு உதவியுள்ளது என்றார். 

பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாளான இன்று உத்தரப் பிரதேசத்தில் பொருட்காட்சி ஒன்றைத் தொடங்கி வைத்துப் பேசிய யோகி ஆதித்யநாத் இதனை தெரிவித்தார். 

பொருட்காட்சியினை தொடங்கி வைத்து யோகி ஆதித்யநாத் பேசியதாவது: “ உலக நாடுகளில் இந்தியா மட்டுமே மக்களுக்கு கரோனா பேராபத்துக் காலத்தில் இலவசங்கள் எதுவும் கொடுக்கவில்லை. தேவை எழுந்தபோது நாட்டில் உள்ள 80 கோடி மக்களுக்கு இலவச ரேஷன் பொருள்கள் மட்டும் வழங்கப்பட்டது. மேலும், இலவசமாக 200 கோடி தடுப்பூசிகளும் செலுத்தப்பட்டன. கரோனா பேராபத்துக் காலத்தில் இந்தியா மட்டுமே எந்த ஒரு கலக்கமுமின்றி பெருந்தொற்றை எதிர்கொண்டது. இதற்கான அனைத்து பாராட்டுகளும் பிரதமர் நரேந்திர மோடியையே சேரும்.” என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேட்புமனுவுக்கு நாளையே கடைசி: அமேதி, ரே பரேலி வேட்பாளர்கள் யார்?

வாக்கு எண்ணிக்கை மையப் பணி: தலைமைக் காவலர் விபத்தில் பலி

கல்குவாரி வெடி விபத்து: மேலும் ஒருவர் கைது

ஒடிஸாவில் ஹேமந்த் சோரனின் சகோதரி போட்டி!

சூப்பா்சோனிக் ஏவுகணை உதவியுடன் தாக்கும் டாா்பிடோ ஆயுதம் வெற்றிகரமாக பரிசோதனை

SCROLL FOR NEXT