முகப்பு
இந்தியா

இந்தியாவில் ஒரேநாளில் 16,464 பேருக்கு கரோனா 

இந்தியாவில் ஒரேநாளில் மேலும் 16,464  பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  

Updated On : 1 ஆகஸ்ட் 2022, 11:56 am IST
பகிர்:

இந்தியாவில் ஒரேநாளில் மேலும் 16,464  பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  

இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 16,464 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த பாதிப்பு 4,40,19,811 ஆக உள்ளது. கரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவா்களின் எண்ணிக்கை 1,43,989 ஆக உள்ளது. 

இன்று காலை வரையிலான 24 மணி நேரத்தில் மேலும் 24 போ் கரோனாவால் உயிரிழந்துவிட்டனா். இதனால் மொத்த உயிரிழப்பு 5,26,396 ஆக உயா்ந்துள்ளது. கரோனாவிலிருந்து இன்று 16,112 போ் குணமடைந்துள்ளனா். இதுவரை 4,33,65,890 போ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனா். கடந்த 24 மணிநேரத்தில் 8,34,167 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. 

Advertisement

Advertisement

நாட்டில் இதுவரை 204.34 கோடிக்கும் அதிகமான தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. நேற்று ஒரேநாளில் 2,73,888 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதுவரை மொத்தம் 87.54 கோடி கரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments