மெட்டா, ட்விட்டர், கூகுள் வரிசையில் 6 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய எச்பி முடிவு!
மெட்டா, ட்விட்டர், கூகுள், அமேசான் நிறுவனங்களின் வரிசையில், அடுத்ததாக எச்பி நிறுவனமும் ஆள்குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
புதுதில்லி: மெட்டா, ட்விட்டர், கூகுள், அமேசான் நிறுவனங்களின் வரிசையில், அடுத்ததாக எச்பி நிறுவனமும் ஆள்குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
லேப்டாப் உள்ளிட்ட மின்னணு சாதனங்களை தயாரித்து வரும், உவலகின் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான எச்பி 6 ஆயிரம் ஊழியர்கள் வரை பணிநீக்கம் செய்ய முடிவு செய்துள்ளது. இது அதன் மொத்த ஊழியர்களின் எண்ணிக்கையில் சுமார் 12 சதவீதம் ஆகும். தற்போது கிட்டத்தட்ட 50 ஆயிரம் பேர் பணியாற்றி வருகின்றனர்.
மேலும், அதன் நடப்பு முழு ஆண்டுக்கான நிதி அறிக்கையில், 4 ஆயிரத்தில் இருந்து 6 ஆயிரம் பேரை 2025 நிதியாண்டுக்குள்ளாக பணிநீக்கம் செய்ய இருப்பதாக தெரிவித்துள்ளது.
Advertisement
Advertisement
கரோனா நோய்த்தொற்று காலங்களில் லேப்டாப் உள்ளிட்ட மின்னணு சாதனங்களின் விற்பனை அதிகரித்த நிலையில், தற்போது தொடர்ந்து சரிவை கண்டு வருகிறது. விற்பனை சரிவு மட்டுமின்றி, பணிவீக்கம் உயர்வு மற்றும் பொருளாதார மந்த நிலை ஆகியவையே நிறுவனத்தின் இந்த முடிவுக்கு காரணமாக அமைந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.