தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் தீ விபத்து!
தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் எண்டோஸ்கோப்பி அறையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதால் அங்கு பரபரப்பு நிலவுகிறது.
தில்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் புற நோயாளிகள் பிரிவு பழைய கட்டடத்தில் இரண்டாவது தளத்தில் உள்ள எண்டோஸ்கோப்பி அறையில் இன்று காலை 11.50 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தளத்திற்கு கீழாக அவசர சிகிச்சை பிரிவு உள்ளது குறிப்பிடத்தக்கது.
தீ விபத்தையடுத்து அங்கிருந்த நோயாளிகள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.
Advertisement
தகவலறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் 8 தீயணைப்பு வாகனங்களுடன் தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
அதிர்ஷ்டவசமாக இதில் உயிரிழப்புகள் ஏதும் இல்லை என முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
காவல்துறையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து விபத்துக்கான காரணம் குறித்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
இதையும் படிக்க | குறையும் தக்காளி விலை!