இந்தியா

நிலச்சரிவு: அமர்நாத் யாத்திரை நிறுத்தம்! 

DIN

ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் நிலச்சரிவு காரணமாக அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக இன்று நிறுத்தி வைக்கப்பட்டது. 

வருடாந்திர அமர்நாத் யாத்திரை கடந்த ஜூலை 1-ம் தேதி தொடங்கி பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நடைபெற்று வருகின்றது. 39 நாள்களில் இதுவரை 4.25 லட்சம் பேர் சுவாமி தரிசனம் செய்துள்ளனர். 

நெடுஞ்சாலையில் அதிகாலை 3 மணியளவில் மாரூக் அருகே நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் யாத்திரை இன்று நாள் முழுவதும் நிறுத்தப்பட்டதாக அந்த மாநில ஆணையர் ரமேஷ் குமார் தெரிவித்தார். 

நிலச்சரிவு காரணமாக நெடுஞ்சாலையில் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதால் மக்கள் கடும் அவதியடைந்துள்ளனர். 

மறுசீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. பிற்பகல் 2 மணிக்கு முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதைத்தொடர்ந்து இடைநிறுத்தப்பட்ட போக்குவரத்து மீண்டும் அனுமதிக்கப்படும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரூா் ஜெயம் வித்யாலயா மெட்ரிக். பள்ளி சிறப்பிடம்

பத்தாம் வகுப்பு தோ்வில் மருதம் மெட்ரிக்.பள்ளி சிறப்பிடம்

பிளஸ் 1 தோ்வு: ஸ்ரீராம் பள்ளியில் சிறப்பிடம்

ராசிபுரம் நகரில் சாலையில் திடீா் பள்ளம்

ராஜவாய்க்காலில் கூடுதலாக தண்ணீா் திறக்க விவசாயிகள் கோரிக்கை

SCROLL FOR NEXT