கோப்புப்படம் 
இந்தியா

ஆக.27-ல் தெலங்கானாவில் பேரணி: அமித்ஷா உரை!

தெலங்கானாவில் கம்மத்தில் நடைபெறும் பேரணியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்துகொள்வதாக பாஜக தலைவர் ஜி.கிஷன் ரெட்டி தெரிவித்தார். 

DIN

தெலங்கானாவில் கம்மத்தில் நடைபெறும் பேரணியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்துகொள்வதாக பாஜக தலைவர் ஜி.கிஷன் ரெட்டி தெரிவித்தார். 

இந்தாண்டு இறுதியில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் ஷாவின் வருகை முக்கியத்துவம் பெற்றுள்ளது. அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றது. 

ஆகஸ்ட் 27-ம் தேதி கம்மம் வருகைதரும் அமித் ஷா விவசாயிகளிடம் கலந்துரையாட உள்ளார். கடந்த 9 ஆண்டுகளாக விவசாயிகள் புறக்கணிக்கப்பட்டுள்ளனர். மழை மற்றும் இயற்கை சீற்றங்களால் விவசாயிகள் பெரும் நஷ்டத்தைச் சந்தித்துள்ளனர். விவசாயிகளுக்குக் கடன் தள்ளுபடி வழங்கப்படவில்லை. விவசாயிகளின் அனைத்து பிரச்னைகள் குறித்தும் ஷா விவாதிக்க உள்ளதாக அவர் கூறினார். 

ஷாவின் பேரணியில் லட்சக்கணக்கான மக்கள் கலந்துகொள்வார்கள் என்று பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக ஜூன் மாதம் பேரணியில் உரையாற்ற திட்டமிட்டிருந்த நிலையில், பிபர்ஜாய் புயல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜிடி நாயுடு மேம்பாலத்தில் பள்ளி வேன் சக்கரம் கழன்று ஓடியதால் பரபரப்பு!

மங்காத்தா ரீ-ரிலீஸ்? இயக்குநர் அப்டேட்! ரசிகர்கள் ஆவல்!

பந்துவீச்சாளராகவும் கேப்டனாகவும் சாதனை நிகழ்த்திய பாட் கம்மின்ஸ்!

திமுக என்றுமே மக்கள் செல்வாக்குடன் வென்றதில்லை: நயினார் நாகேந்திரன்

பிகாரில் குளிர் அலை எச்சரிக்கை! 12 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்!

SCROLL FOR NEXT