பூஜ்ஜியத்திற்கும் குறைவான வெப்பநிலையில் தொடர்ந்து தத்தளிக்கும் காஷ்மீர்!
காஷ்மீரின் பெரும்பாலான இடங்களில் இன்று குறைந்தபட்ச வெப்பநிலை குறைந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் இன்று தெரிவித்துள்ளது.
ஸ்ரீநகர்: காஷ்மீரின் பெரும்பாலான இடங்களில் இன்று குறைந்தபட்ச வெப்பநிலை குறைந்துள்ளதாகவும், அதே வேளையில் ஸ்ரீநகரில் மைனஸ் 2.4 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அமர்நாத் யாத்திரைக்கான அடிப்படை முகாம்களில் ஒன்றான தெற்கு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள பஹல்காமில் குறைந்தபட்ச வெப்பநிலையான மைனஸ் 4.8 டிகிரி செல்சியஸாக பதிவானது.
பாரமுல்லா மாவட்டத்தில் உள்ள குல்மார்க்கில் புகழ்பெற்ற ஸ்கை ரிசார்ட் அமைவிடத்தில் வெப்பநிலையானது மைனஸ் 3 டிகிரி செல்சியஸாக குறைந்துள்ள நிலையில் காஸிகுண்டில் மைனஸ் 2.4 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது.
Advertisement
Advertisement
தெற்கு காஷ்மீரின் கோகர்நாக் நகரில் மைனஸ் 2 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும், குப்வாராவில் மைனஸ் 2.5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும் பதிவாகியுள்ளது.
டிசம்பர் 11ஆம் தேதி வரை வானிலை மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும், இரவு நேர வெப்பநிலை சற்றே குறையும். டிசம்பர் 12 முதல் 15 வரை, ஜம்மு-காஷ்மீரின் உயரமான பகுதிகளில் லேசான மழை அல்லது பனிப்பொழிவு ஏற்பட வாய்ப்புள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.