கோப்புப்படம். 
இந்தியா

வேற்று சாதி இளைஞருடன் காதல், தங்கையை சுட்டுக் கொன்ற அண்ணன்!

உத்தரப் பிரதேசத்தில் வேற்று சாதி இளைஞரைக் காதலித்த தங்கை, அண்ணனால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். 

DIN

உத்தரப் பிரதேசம் ஷேக்பூரா கதீம் கிராமத்தில் 17 வயதான தங்கையை சுட்டுக்கொன்ற அண்ணனைக் காவல்துறையினர் தேடிவருகின்றனர். 

கடந்த ஞாயிறு அன்று வீட்டில், தங்கை முஸ்கானை  குறுஞ்செய்தி அனுப்புவதை நிறுத்துமாறு அண்ணன் ஆதித்யா கூறியுள்ளார். அவரது பேச்சைக் கேட்காததால் தங்கையை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றதாகக் கூறப்படுகிறது.

முஸ்கானை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதில் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 

அண்ணன் ஆதித்யா நாட்டுத் துப்பாக்கியைப் பயன்படுத்தியிருப்பதாக உதவி காவல் கண்காணிப்பாளர் அபிமன்யூ மங்ளிக் தெரிவித்துள்ளார்.

தங்கை முஸ்கான் வேற்று சாதியின இளைஞரைக் காதலித்து வந்ததாகவும் அண்ணன் ஆதித்யா அதை எதிர்த்து வந்ததாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர், இது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும், தப்பிச்சென்ற குற்றவாளியைப் பிடிக்கும் முயற்சியில் காவல்துறையினர் உள்ளனர்.   

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குல்தீப் 5 விக்கெட்டுகள்: 248 ரன்களுக்கு ஆட்டமிழந்த மே.இ.தீ!

9 ஆண்டுகால பாஜக ஆட்சியில் பெண்கள் பாதுகாப்பு மிகப்பெரியளவில் கேள்விக்குறியாகி உள்ளது! -அகிலேஷ் யாதவ்

சென்ராயப் பெருமாள் கோயிலில் எடப்பாடி பழனிசாமி சாமி தரிசனம்

கனமழையால் வெள்ளம்! தண்ணீரில் மிதந்து சென்ற உணவகம்! | Mexico

மருத்துவக் கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: 3 பேர் கைது!

SCROLL FOR NEXT