இந்தியா

தேசிய பேரிடர் நிவாரண நிதி வேண்டும்: முதல்வர் ஸ்டாலின்

DIN

புது தில்லி: திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் வரலாறு காணாத மழை வெள்ளத்தால் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் ஏற்கெனவே வடக்கு தமிழக மாவட்டங்களில் மிக்ஜாம் பாதிப்புகளுக்கான நிவாரணம் வழங்கப்பட்டுவரும் சூழலில் இரண்டாவது பேரிடராக இது ஏற்பட்டுள்ளதாகவும் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரங்களை மீட்கத் தேசிய பேரிடர் நிவாரண நிதி வழங்கக் கோரி, புது தில்லியில் பிரதமரைச் சந்திக்கவுள்ளார் முதல்வர்.

அங்கு நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் ஸ்டாலின் தெரிவித்தாவது:

“டிச.4 தேதி ஏற்பட்ட புயலாலும் கன மழையாலும் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் வெள்ளச் சேதங்களைச் சரி செய்ய முதல் கட்டமாக 5 ஆயிரத்து 50 கோடி ரூபாய் கேட்டிருந்தேன். ஆனால் வழக்கமாக வழங்கப்பட வேண்டிய 450 கோடி மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.

இது குறித்து மோடியை நேரில் சந்திக்கலாம் என எண்ணிய போது அடுத்த பேரிடராக திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய 4 மாவட்டங்களில் கடுமையான மழை பெய்துள்ளது. ஓராண்டில் பெய்ய வேண்டிய மழை ஒரே நாளில் கொட்டித் தீர்த்துள்ளது.

வரலாறு காணாத மழையால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்டு அவர்களது வாழ்வாதாரங்களை திரும்ப உருவாக்க உடனடி நிவாரணமாக தேசிய பேரிடர் நிவாரண நிதி வழங்கிட மாண்புமிகு இந்திய பிரதமர் அவர்களிடம் கோர இருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

செவ்வாய்க்கிழமை இரவு 10.30 மணிக்கு பிரதமர் மோடியைச் சந்திக்க முதல்வர் ஸ்டாலினுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சலங்கை பூஜை விழா

போதை மறுவாழ்வு மையத்தில் இளைஞா் மா்ம மரணம்

சம்வத்ஸரா அபிஷேகம்

ஹஜ் யாத்ரிகா்களுக்கு தடுப்பூசி முகாம்

நாகை அரசு தலைமை மருத்துவமனையில் அனைத்து பிரிவுகளும் செயல்பட கோரி கையொப்ப இயக்கம்

SCROLL FOR NEXT