இந்தியா

450 ஆண்டுகளாக மது, புகைக்குத் தடை! தமிழ்நாட்டில் எந்த கிராமத்தில் தெரியுமா?

முனைவா் செ. சரத்

இளைஞர்களிடையே புகை பிடித்தல், மதுப் பழக்கம் அதிகரித்துள்ள இந்த காலகட்டத்தில் தமிழ்நாட்டில் உள்ள ஒரு கிராமத்தில் கடந்த 450 ஆண்டுகளாக மது, புகைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 

மதுரை மாவட்டத்தில் உள்ள தேனூர் கிராமம்தான் அது! 

சோழவந்தான் அருகே வைகை ஆற்றங்கரையில் உள்ள தேனூரில் 3,000 குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்கு 450 ஆண்டுகளுக்கும் மேலாகப் புகை பிடித்தலுக்கும் மது அருந்துதலுக்கும் தடை அமலில் உள்ளது. 

66 வயதான அந்த கிராமத்தைச் சேர்ந்த பி.செல்லம் கூறும்போது, இந்த கிராமம் சுந்தர்ராஜன் பூமி, கள்ளழகர் (விஷ்ணு) தேசம். கடவுளுக்கு எங்களுடைய பக்தி மரியாதையைக் காட்ட இங்கு சிகரெட், மதுவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இது நமது பழங்கால மரபுகளையும் மதிக்கும் ஒரு வழி என்றார்.

மேலும், கள்ளழகருக்கு மரியாதை செலுத்தும் வகையில், இந்த கிராமத்தில் வசிக்கும் பலரும் பாதணிகளை அணிவதைத் தவிர்த்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

வெயில், கொன்றை, மஞ்சள்.. நினைவில் வருபவை!

‘அரண்மனை 4’ - மிகப்பெரிய வெற்றி: குஷ்புவின் வைரல் பதிவு!

குங்குமப்பூவும் கொஞ்சும் விழிகளும்..

சிபிஎஸ்இ 10,12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும்?

SCROLL FOR NEXT